“எந்த மொழியையும் திணிக்கக்கூடாது” – அமித்ஷா அமர்ந்திருந்த மேடையில் வெங்கையா நாயுடு பேச்சு

0

தான் எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் பேசிய வெங்கையா நாயுடு “எந்த மொழியையும் திணிக்க கூடாது” என்று பேசியுள்ளார்.

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தன் வாழ்வும், பணிகளும் குறித்து ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அதன் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடந்தது . இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நடிகர் ரஜினிகாந்த், முதல்வர் பழனிசாமி, ஆளுனர் பன்வாரிலால் புரோகித், ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய வெங்கையா நாயுடு “ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அனைவருக்குமானதாக இருக்க வேண்டும். அதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். நாடு சுதந்திரம் அடைந்து 20 சதவீதம் மக்கள் இன்னும் வளர்ச்சியடையாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. எந்த மொழியையும் கட்டாயப்படுத்தி திணிக்கக் கூடாது. அதேசமயம் காரணமில்லாமல் ஒரு மொழியை எதிர்க்கவும் கூடாது” என பேசினார்.

Spread the love

Comments are closed.