21 வது ஆசிய முதுநிலை தடகள விளையாட்டில் வெற்றி பெற்றவர்களின் சந்திப்பு

0

ஆசிய முதுநிலை தடகள சாம்பியன்ஷிப் மலேசியாவின் குச்சிங்கில் 2 டிசம்பர் முதல் 7 டிசம்பர், 2019 வரை நடத்தப்பட்டது.

எக்மோர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில், இன்று (15.12.2019) ஆசிய முதுநிலை தடகள விளையாட்டில் வெற்றி பெற்றவர்கள் விழாவில் கவுரவிக்கப்பட்டனர். இந்த நிகழ்வை சென்னை மாவட்ட முதுநிலை தடகள சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.

பெண்களுக்கான 35 வயதுக்கு அதிகமானோர் பட்டியலில் R.பிரமிளா நீளம் தாண்டுதலிலும், 40 வயதுக்கு அதிகமானோர் பட்டியலில் S.சாந்தி சுத்தி வீசுதலிலும் புதிய சாதனையை படைத்தனர்.

வெற்றி பெற்ற மொத்த பதக்கங்களின் எண்ணிக்கை – 35 (தங்கம் -10, வெள்ளி -16 மற்றும் வெண்கலம் -9)

சென்னையிலிருந்து கிட்டத்தட்ட பங்கெற்ற அனைத்து வீரர்களும் மெரிட் பட்டியலில் இடம்பிடித்தனர். விளையாட்டில் பங்கெற்ற அனைத்து வீரர்களின் செயல்திறன் மிகவும் பாராட்டும்படி அமைந்துள்ளது

புதிய சாதனையை உருவாக்கிய இரு பெண்களுக்கும் சென்னை மாவட்ட முதுநிலை தடகள சங்கத்தின் தலைவர் செண்பக மூர்த்தி ரொக்கபணத்தை பரிசாகவும் மேலும் விருதுகளையும் அளித்தார்.

Spread the love

Comments are closed.