இஸ்லாமிய மக்களுக்கு ரம்ஜான் பெருநாள் வாழ்த்து கூறிய இந்திய ஹஜ் அசோஷியேஷன் தலைவர்அபூபக்கர்

உலகம் இதுவரை கண்டிராத அச்சுறுத்தல் நிலவும் நேரத்தில் ரம்ஜான் பண்டிகை என்பது காலத்தின் கட்டாயமாகிப்போனது.

30 நாட்கள் நோன்பிருந்து, இறைவனுக்கு நன்றி சொல்லும் நாள் இதுவென்றிவோம். ஆனால் இந்தப் பெருநாள், நம்மில் பலரை பொருளாதார ரீதியாக கீழே தள்ளினாலும், விரைவில் மீண்டுவருவோம் என்ற நம்பிக்கையோடு பெருநாளை எதிர்கொள்வோம்.

சாதி, மதம், எல்லாம் கடந்து மனிதம் மட்டுமே நிலையானது எண்ணத்தை இதயத்தில் கொண்டு அனைவரும் ஒரு தாய் மக்களாய் தமிழராய் ரம்ஜானை வரவேற்போம். அனைவர் நலனைக் கருத்தில் கொண்டு பள்ளிவாசல்களில் கூட்டுப்பிராத்தனை தவிர்ப்போம். அவரவர் வீடுகளில் தொழுகை செய்வோம்.

இருப்போருக்கும், இல்லாதோர்க்கும் ரம்ஜான் விருந்து கொடுப்பதே நம் வழக்கம். இந்தமுறை இன்னும் அதிகமாய் சமைத்து பகிர்தலை விரிவு செய்வோம். நம் அருகில், தெருவில் இருக்கும் அனைவருக்கும் பிரியாணி தந்து பசிப்பிணி போக்குவோம்.

சுத்தம்,சுகாதாரம், சமூக இடைவெளி பின்பற்றி இதயங்களுக்குள் இடைவெளி இல்லாமல் ரம்ஜானை கொண்டாடுவோம்.கொரோனா இல்லாத இந்தியா விரைவில் மலர இறைவனை வேண்டுவோம். உலகம் முழுக்க வாழும் அனைத்து இஸ்லாமியர்களுக்கும் இந்திய ஹஜ் அசோசியேஷன் சார்பில் ரம்ஜான் பெருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்படிக்கு
பிரசிடெண்ட் அபூபக்கர்,
தலைவர் இந்திய ஹஜ் அசோஷியேஷன்