தமிழ் மற்றும் மலையாளத்தில் ஒரே நேரத்தில் உருவாகும் “சிவப்பு கண்கள்”

தமிழ் மற்றும் மலையாளத்தில் ஒரே நேரத்தில் உருவாகும் “சிவப்பு கண்கள்”

தமிழ் மற்றும் மலையாளத்தில் ஒரே நேரத்தில் உருவாகும் “சிவப்பு கண்கள்” K.N.பைஜு இயக்குகிறார்.

உலகமே கொரோனாவால் தனித்தீவாய் காட்சியளித்து வரும் நிலையில் மனிதர்களும் தனித்தனி தீவு போல தனித்து வாழும் சூழலுக்குள் தள்ளப்பட்டுள்ளனர். அதில் கலைஞர்களும் அடக்கம். ஆனால் கலைஞர்களின் மனது கற்பனைகளால் ஆனது. கைகளைக் கட்டிப்போட்டாலும் கலைஞன் தன் கற்பனைகளை கட்டவிழ்த்தப்படியே தான் இருப்பான். அந்த வகையில் இயக்குநர், நடிகர் K.N.பைஜு வீட்டில் இருந்தபடியே கலக்கலாக ஒரு வீடியோவை உருவாக்கி அசத்தி இருக்கிறார். இந்த வீடியோவில் உள்ள எடிட்டிங் ஒளிப்பதிவு, இயக்கம் நடிப்பு என அனைத்தையும் K.N.பைஜு ஒருவரே செய்திருக்கிறார்.

மலையாளம் தமிழ் என இரு மொழிகளிலும் “யாரோ ஒருவன்” படம் மூலம் கவனம் ஈர்த்தவர் K.N.பைஜு அவர் தனது நவகிரஹா சினி ஆர்ட்ஸ் பட நிறுவனம் சார்பில் எழுபத்தி ஐந்திற்கும் அதிகமான படங்களை விநியோகம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மலையாளத்தில் அவர் இயக்கியுள்ள “பிரானய சல்லாபம்” படம் விரைவில் வெளியாக உள்ளது.

தற்போது “சிவப்பு கண்கள்” என்ற பெயரில் தமிழிலும், “கழுகன்” என்ற பெயரில் மலையாளத்திலும் ஒரே நேரத்தில் இயக்கவிருந்தார்.

கொரோனா வந்துவிட்டதால் ஊரடங்கு முடிந்த பின் வேலைகளைத் துவங்க இருக்கிறார்.