கணேஷ் வெங்கட்ராமுக்கு நடிகை மாதுரி தீட்சித்தின் வாலண்டைன்ஸ் டே பரிசு

0

மாதுரி தீட்சித் “GUNS OF BANARAS” படத்தின் டிரெய்லரை வெளியிட்டார்.

நடிகர் கணேஷ் வெங்கட்ராம், பாலிவுட்டில் அறிமுகமாகும் “கன்ஸ் ஆஃப் பனாரஸ்” படத்தின் ட்ரெய்லரை மும்பையில் சமீபத்தில் பிரபல பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித் அறிமுகப்படுத்தினார்

“கன்ஸ் ஆஃப் பனாரஸ்” படத்தின் விக்ரம் சிங் என்ற வில்லனாக நடிக்கும் கணேஷ் இப்படத்தின் ஒரு வலிமை மிகுந்த தாதாவாக நடித்திருப்பதாகவும் அதற்காக அந்த கதாபாத்திரத்தின் தன்மை அறிந்து நடித்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

என் இள வயது முதலே என்னுள் ஈர்ப்பை உண்டாக்கிய மாதுரி தீட்சித் எனது முதல் ஹிந்தி படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டதை விட எனக்கு வேறு என்ன பெரிய வாலண்டைன்ஸ் டே பரிசு கொடுத்திருக்க முடியும் என்று வெட்கத்துடன் நடிகர் கணேஷ் வெங்கட்ராம் கூறினார்.

ட்ரெய்லரில் உள்ள உண்மையான அதிரடி சாகசங்களை நடிகை மாதுரி தீட்சித் பாராட்டியதோடு, கதாநாயகனாக நடிக்கும் கரண் நாத் மற்றும் கணேஷின் கதாபாத்திரமறிந்து நடித்திருக்கும் யுக்தியை பாராட்டினார். ‘கேங்க்ஸ் ஆஃப் வாஸ்ஸெய்பூர்’ படத்தின் பணியாற்றிய சண்டை பயிற்சியாளர் ஷியாம் கவுஷல் கரண் நாத் மற்றும் கணேஷின் கதாபாத்திரங்களுக்காக அவர்கள் அளித்த முழு ஈடுபாட்டையும் பாராட்டினார்

“கன்ஸ் ஆஃப் பனாரஸ்” படத்தில் நத்தாலியா கவுர், மறைந்த திரு வினோத் கன்னா, அபிமன்யு சிங், ஷில்பா ஷிரோட்கர் மற்றும் மோகன் அகாஷே ஆகியோர் நடித்துள்ளனர். ஷைன்னா நாத் தயாரிப்பில் சேகர் சூரி இயக்கியிருக்கும் “கன்ஸ் ஆஃப் பனாரஸ்” பிப்ரவரி 28 வெளியாகவுள்ளது.

கணேஷ் வெங்கட்ராம் தற்போது நடிகர்-இயக்குனர் யூகி சேது இயக்கும் புதிய தமிழ் படத்தில் நடித்து வருகிறார். “நாங்கள் 80 சதவிகித படப்பிடிப்பை முடித்துவிட்டோம், மார்ச் மாதத்தில் முழு படப்பிடிப்பும் முடிக்க திட்டமிட்டுள்ளோம். இது ஒரு வித்தியாசமான த்ரில்லர் படமாக உருவாகிறது. பெரும்பாலும் லண்டனில் படமாக்கப்பட்ட இப்படம் அனைவரையும் திகிலின் உச்சிக்கே இட்டுசெல்லும்” என்று கூறினார்.

மேலும் “தாடி” எனும் தெலுங்கு படத்தில் நடித்து வரும் கணேஷ் வெங்கட்ராம் அப்படத்தை பற்றி கூறுகையில் ”கமர்சியலாக உருவாகும் இப்படத்தில் நான் ஒரு நடிகராக நடிக்கிறேன். பத்திரிகையாளராக ஸ்ரீகாந்த் நடிக்கிறார். இரண்டு வெவ்வேறு பின்னணிகளை கொண்ட இருவர் ஒன்றினைந்து சமூக பிரச்சினையை தீர்க்க எடுக்கப்படும் முயற்சிகளே இப்படத்தின் கதைக்களம்” என்று கூறினார்.

Spread the love

Comments are closed.