‘நட்புனா என்னானு தெரியுமா’ விமர்சனம்

சிறுவயதில் இருந்தே கவின், அருண்ராஜா காமராஜ், ராஜூ மூன்று பேரும் ஒன்றாக நண்பர்களாக வளர்கிறார்கள்.  இவர்கள் வாழ்வில் பத்தாம் வகுப்பு படிக்கும் போது ஒரு சம்பவம் நடக்கிறது, அதன் பிறகு பெண்களை நம்ப கூடாது. நம் வாழ்க்கையிலும்  பெண்களே கிடையாது என்று முடிவு செய்கிறார்கள்.

எந்த வேலைக்கும் போகாமல் ஊர் சுற்றி வரும் இவர்கள் சுய தொழில் செய்ய முடிவெடுத்து திருமண நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் வேலையை ஆரம்பிக்கிறார்கள்.

வேலை ஓரளவுக்கு நன்றாக போய் கொண்டிருக்கும் நிலையில்,  ரம்யா நம்பீசனை பார்த்ததும் காதல் வய படுகிறார் ராஜு. வேலையை விட்டுவிட்டு ரம்யாவை பார்க்க சென்று விடுகிறார். ஒரு நாள் இருவரையும் அழைத்து சென்று ரம்யா நம்பீசனை காட்டுகிறார். ரம்யா நம்பீசனை பார்த்ததும் இருவருக்குமே பிடித்து விடுகிறது.

ஒரு கட்டத்தில் கவின் அருண்ராஜா காமராஜிடம்  ரம்யா உன்னைத்தான் பார்த்தால் என்று சொல்ல அவரும் அதை நம்பி ரம்யாவை காதலிக்கிறார்.

இந்நிலையில் கவின் ரம்யாவிடம் ஐ லவ் யூ சொல்கிறார். ரம்யாவும் கவினின் காதலை ஏற்றுக் கொள்கிறார். இவர்களது காதலால் நட்பில் பிளவு ஏற்படுகிறது.

இறுதியில் கவின் – ரம்யா நம்பீசன் காதல் சேர்ந்ததா? மீண்டும் நண்பர்கள் சேர்ந்தார்களா? என்பதே “நட்புனா என்னானு தெரியுமா” படத்தின் மீதிக்கதை.

கவின் நாயகனாக நண்பனாகவும், காதலனாகவும்  சிறப்பாக நடித்திருக்கிறார். அருண்ராஜா காமராஜூக்கு செமையா பண்ணிருக்காரு காமெடில. ராஜுவும் கதைக்கு ஏற்றவாறு சிறப்பாக நடித்துள்ளார். மூன்று பேருக்குமே அடுத்து அடுத்து வாய்ப்புகள் கிடைக்க வாழ்த்துக்கள்.

ரம்யா நம்பீசன் அழகு பதுமையாக வந்து தன் வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.

மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன், இளவரசு, ரமா, ஆடுகளம் நரேன், ஆகியோர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். 

இளைஞர்களை கவரும் விதமாக இயக்கி  இருக்கிறார் இயக்குநர் சிவா அரவிந்த். சி.தரண்குமாரின் இசையில் பாடல்களும் ரசிக்க வைக்கிறது. 

ஆக மொத்தம் `நட்புனா என்னானு தெரியுமா’ ரசிக்கவும் சிரிக்கவும் வைக்கும் நண்பர்களை.