அழகி, ஆட்டோகிராப், 96 வரிசையில், பள்ளி பருவத்தின் வசந்தகால நினைவுகளை மீட்டெடுக்கும் “நட்சத்திர ஜன்னலில்”

படிக்கும் வயதில் படிப்பு மட்டும்தான் முக்கியம். அப்படி இல்லாமல் கவனம் சிதறினால் முடிவு என்னவாகும் என்பதனை இயல்பாக சொல்லி இலேசாக எச்சரிக்கின்ற இளமையின் பயணம் இந்தக் கதை.

ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் இளமை பயணம் என்பது மிக மிக முக்கியமானது. நேர்வழியில் சென்ற ஒரு இளைஞனின் வாழ்க்கை அவனது தனிப்பட்ட விருப்பத்தினால் என்ன முடிவானது என்பதனை ரசனையோடு சொல்லி இருக்கிறது “நட்சத்திர ஜன்னல்”.

நீண்ட நாட்குளுக்குப் பிறகு குடும்பத்துடன் பார்க்க வேண்டிய அழகான திரைப்படம். இது இளைஞர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம்.

புதுமுகங்கள் அபிஷேக் குமரன் கதாநாயகனாகவும், அனுப்பிரியா கதாநாயகியாகவும் நடித்திருக்கும் இந்த திரைப்படத்தில் இவர்களுடன் முக்கிய வேடத்தில்
“போஸ்” வெங்கட், “பாய்ஸ்” ராஜன், “ஜீவா”ரவி, “ஆடை” ஸ்ரீரஞ்சனி, “திருப்பாச்சி” பெஞ்சமின், ஸ்ரீலதா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள் இந்த படத்தினை ராஜசேகர் ரத்தினம் ஔிப்பதிவு செய்ய உதயன் இசையமைக்க, சி.எஸ்.பிரேம் எடிட்டிங் செய்துள்ளார்.

எழுத்து இயக்கம்
ஜெய முருகேசன். தயாரிப்பு முத்துக்குமரன் இந்த திரைப்படத்தின் படபிடிப்பானது சென்னை, புதுச்சேரி, கேரளா மற்றும் திருக்கோவிலூர் போன்ற இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. பாடல்கள் மு.மேத்தா, யுகபாரதி, புதுவை R.சிவப்பிரகாசம் ஆகியோர் எழுத ரமேஷ் ரெட்டி மற்றும் அக்ஷய் ஆனந்த் இருவரும் நடனம் அமைத்தள்ளார்கள். இளைஞர்களுக்கு மிகச் சிறந்த வழிகாட்டியாக அமையவிருக்கும் “நட்சத்திர ஜன்னல்” திரைப்படம் ஜூன் 28 அன்று தமிழகமெங்கும் வெளியாகிறது.