மோசடி விமர்சனம்

மோசடி விமர்சனம்

நண்பர்களுடன் சேர்ந்து வித விதமான பண மோசடிகளில் ஈடுபட்டு  நாயகன் விஜூ மக்களை ஏமாற்றுகிறான். மக்களின் பேராசையை பயன்படுத்தி 80 கோடி ரூபாயை சம்பாதித்து விடுகிறான்.100 ரூபாயை சேர்க்க ஏமாற்றும் நேரத்தில் போலீசிடம் மாட்டிக் கொள்கிறார் நாயகன் விஜூ.
 
போலீசிடம் மாட்டிக்கொண்ட விஜூ எதற்க்காக மோசடிகளில் ஈடுபட்டு பணம் சம்பாதிக்கிறார் என தன் கதையை பிளாஷ்பேக்காகா சொல்கிறார். ஆளூங்கட்சி அமைச்சர் பண மதிப்பிழக்கத்தின் போது பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை புது ரூபாய் நோட்டுகளாக மாற்றும் வேளைகளில் ஈடுபடுகிறார். அப்போது நாயகன் விகுவிடம் 100  கோடியை உன் வீட்டில் வைத்து கொள் கொஞ்ச நாள் கழித்து வாங்கிக்கொள்கிறேன் என்று சொல்கிறார். 
 
ஆனால் அந்த பணம் காணாமல் போகிறது அதனை திருப்பி தரவே இப்படி பணம் சேர்த்தேன் என்று கூறுகிறார் விஜூ.இதனை தெரிந்துக்கொண்ட போலீஸ்  என்ன செய்தது? என்பதே மோசடி படத்தின் மீதிக்கதை.
 
பணமதிப்பிழக்கத்தின் போது மக்கள் எப்படி கஷ்டப்பட்டார்கள் ,எப்படி எல்லாம் பணத்தை மாற்றினார்கள் என்று காட்டியுள்ளார். இயக்குனர்.ன் உஅனைவருமே புதுமுகங்ள் என்பதால்
 
ஷாஜகானின் இசையும், ஆர்.மணிகண்டனின் ஒளிப்பதிவும்  ஓகே என்றே சொல்லலாம். 
 
நாயகன் உட்பட அனைவருமே புதுமுகங்ள் என்பதால் நடிப்பில் சிறிது தடுமாற்றம் இருக்கிறது. அதனை சரி செய்து கொண்டால் நல்ல எதிர்காலம் அனைவருக்குமே.