ஐதராபாத்தில் மெட்ரோ ரயில்

நெரிசல் மிகுந்த போக்குவரத்தை தெலுங்கானா மாநிலத்தில் குறைக்கும் நடவடிக்கையில் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மத்திய அரசின் உதவியுடன் மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்து, ஐதராபாத்தில் வரும் 29ஆம் தேதி முதல் மெட்ரோ ரயில் சேவை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது என மாநில மந்திரி ராமாராவ் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த சேவை காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும். விசேஷ நாள்கள் உள்பட முக்கிய நாள்களில் காலை 5.30 மணி முதல் இரவு 11.00 மணி வரை இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்கட்ட சேவையாக நாகோல் முதல் மியாமியாபூர் வரையிலான சுமார் 30 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் சேவை துவங்கவுள்ளது.