’பன்னோக்கு சொகுசு வாகனங்களின் முன்னோடி’ மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியா தனது புதிய வி-க்ளாஸ் எலைட் வாகனத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது

மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியா, தான் உருவாக்கிய சொகுசு பன்னோக்கு பயன்பாடு வாகனப் பிரிவை
[Luxury MPV segment] விரிவுப்படுத்துகிறது.

  • புதிய வி-க்ளாஸ் எலைட் [V-Class Elite], பல பயன்பாட்டு அம்சங்களை அளிக்கும் சொகுசு
    எம்பிவி [luxury ‘MPV’] –யாகும். மேலும் அருமையான பயணத்திற்கான செளகரியங்களையும்,
    நடைமுறை பயன்பாடுகளையும் அளிக்கிறது.
  • வி-க்ளாஸ் எலைட் வாகனம், 6 இருக்கைகள் [6 seater] மற்றும் நீளமான இடைவெளி கொண்ட
    சக்கரங்கள் [long-wheelbase] ஆகிய அம்சங்களை கொண்ட பிரிவு வாகனமாக
    அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • பிஎஸ்6 [BS VI] உமிழ்வு விதிமுறைகளுக்கு மாறும் மெர்சிடிஸ்-பென்ஸின் பயணத்தில், வி 220 [V 220] சொகுசு வாகனமானது 2 லிட்டர் பிஎஸ்6 முறைக்கு உகந்த ஒஎம் 654 டீசல் என்ஜினுடன் [2 litre BS VI compliant OM 654 diesel engine] வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
  • முதல் முறையாக, 1950 சிசி | 120 kW|380 Nm| 11.1 விநாடிகளில் 0-100 km/h | 9G-TRONIC என
    அபாரமான பன்னோக்கு சொகுசு வாகனமாக அறிமுகமாகி இருக்கிறது.
  • நீண்ட தூர பயணத்தையும் களைப்பில்லாமல் செளகரியமாக மேற்கொள்ள உதவும் மசாஜ்ஜிங்
    ஃபங்ஷன் உடன் கூடிய சொகுசு இருக்கைகள், க்ளைமேட் கண்ட்ரோல், பர்மிஸ்டர்® சரவ்ண்ட்
    சவுண்ட் சிஸ்டம், 640 W அளவு ஒலித்திறன் கொண்ட 15 ஸ்பீக்கர்கள் என ’வி 220 எலைட்’
    பயணத்தை உற்சாகமாக்குகிறது.
  • செலக்ட்டிவ் டேம்பிங் சிஸ்டம் [selective damping system]உடன் எந்த சாலையிலும்
    கட்டுக்கோப்பான முறையில் பயணிக்க உதவும் ‘எஜிலிட்டி கண்ட்ரோல்’ சஸ்பென்ஷன் [AGILITY CONTROL suspension] உடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • ஸ்பெயின் நாட்டில் ப்ரத்யேகமாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த சொகுசு பன்னோக்கு
    பயன்பாடு வாகனம் உலகில் 90 நாடுகளில் வெற்றிகரமாக விற்பனையாகி வருகிறது.
  • ’வி 220’ வாகனத்தின் பராமரிப்பு செலவு 2 வருடங்கள்/ கிமீ –க்கு ரூபாய் முதல்
    ஆரம்பமாகிறது.
  • ’வி-க்ளாஸ் எலைட்’-ன் எக்ஸ்-ஷோரூம் விலை, ரூபாய் [எக்ஸ்-ஷோரும், இந்தியா] முதல்
    ஆரம்பமாகிறது.

சென்னை – இந்தியாவின் மிகப்பெரும் சொகுசு மகிழுந்து தயாரிப்பாளரான மெர்சிடிஸ்-பென்ஸ் [India’s largest luxury carmaker], தனது ‘வி-க்ளாஸ் எலைட்’ வாகனத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. ‘சொகுசு பன்னோக்கு பயன்பாடு வாகனப் பிரிவில்’ [‘Luxury Multi-Purpose Vehicle’ (MPV)] முன்னோடியாக திகழும் இந்நிறுவனம், தற்போது பயணிகள் பிரிவு கார்களில் இதுவரையில்லாத மிக உயர் தரங்களுடன், அபாரமான செயல்பாடு மற்றும் அசத்தலான நடைமுறை பயன்பாடுகள் இணைந்த ப்ரீமிய தர சொகுசு பன்னோக்கு பயன்பாடு வாகனமாக ‘‘வி-க்ளாஸ் எலைட்’-ஐ களமிறக்கி இருக்கிறது. பலசிறப்பம்சங்களை கொண்டிருக்கும் கார் ஆக வடிவமைக்கப்பட்டிருக்கும் ‘வி-க்ளாஸ் எலைட்’, பலவிதமான தனிப்பயனாக்கல் விருப்பத்தேர்வுகளில் இருந்து வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்த, விருப்பமான தேர்வுகளைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்புகளை அளிக்கிறது. மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியாவின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான திரு. மார்ட்டின் ஸ்வெங்க் [Martin Schwenk, Managing Director & CEO, Mercedes-Benz India], இன்று ’வி-க்ளாஸ் எலைட்’-ஐ சென்னையில் அறிமுகப்படுத்தினார்.

புதிய வாகன அறிமுக விழாவில் பேசிய மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியாவின் நிர்வாக இயக்குநரும்
தலைமை நிர்வாக அதிகாரியுமான திரு. மார்ட்டின் ஸ்வெங்க் [Martin Schwenk, Managing Director & CEO, Mercedes-Benz India], ‘’ "எங்கள் விவேகமிக்க வாடிக்கையாளர்களுக்காக மற்றொரு தனித்துவமான, பன்னோக்கு பயன்பாடுகளுடைய ஒரு சிறப்பான தயாரிப்பை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். இதன் மூலம் மேம்பட்ட தயாரிப்புகளையே விரும்பும் வாடிக்கையாளர்களுக்கான எங்களது உயர்ரக தயாரிப்புகள் தொடர்வது குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த ஆண்டு ஜனவரியில் அறிமுகப்படுத்தப்பட்ட வி-க்ளாஸ், சொகுசு எம்பிவி பிரிவில், ஒரு முன்னோடியாக பெரும் தாக்கத்தை உருவாக்கியிருக்கிறது. மாபெரும் வரவேற்பைப் பெற்று வெற்றி கண்டிருக்கிறது நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களின் கருத்துகளை எப்பொழுதும் அக்கறையுடன் கேட்டு வருகிறோம். அதன் தொடர்ச்சியாக, இப்போது ’வி-க்ளாஸ் எலைட்’-ன் அறிமுகம், இந்தியாவில் வி-க்ளாஸின் வரம்பை நிறைவு செய்வதற்கான ஒரு அருமையான வாய்ப்பாக அமைந்திருக்கிறது. ’வி-க்ளாஸ் எலைட்’, மேம்பட்ட சொகுசு அம்சங்கள், ஈடு இணையற்ற செளகரியங்கள், அருமையா வசதிகள் மற்றும் சமரசமற்ற பாதுகாப்பு சிறப்பம்சங்கள் ஆகியவற்றுடன் அபாரமான செயல்பாட்டை கொண்ட பன்னோக்கு சொகுசு காராக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. மெர்சிடிஸ்-பென்ஸ் வாகனத்தின் உண்மையான குணாதிசயங்களை எடுத்துக்காட்டும் ஒரு சிறப்பான தயாரிப்பாக இவ்வாகனம் இருக்கிறது. ’வி-க்ளாஸ் எலைட்’, பெரிய குடும்பங்கள், விளையாட்டு ஆர்வலர்கள், வணிக உரிமையாளர்கள், என தங்களுக்குப் பொருந்துகிற, வாழ்க்கை முறைக்கு ஏற்ற ஒரு உயர்நிலை சொகுசு பன்னோக்கு பயன்பாடு வாகனத்தை விரும்பும் பல்வேறு தரப்பிலான வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. ’வி-க்ளாஸ் எலைட்’ இந்தியாவில் அதன் வாகனப் பிரிவை
சேர்ந்த வாகனங்களிலேயே தனித்துவமிக்க தயாரிப்புகளில் ஒன்றாக இருப்பதோடு, இந்தியாவில்
ஆடம்பரமான சொகுசுப் பயணத்திற்கான புதிய வரையறைகளை உருவாக்கும் என்பதிலும், இந்த
வாகனப்பிரிவை மேலும் விரிவுப்படுத்தும் ஒரு அருமையான வாகனமாக இருக்குமென்பதிலும் நாங்கள் மிக உறுதியாக நம்புகிறோம்’’ என்றார்.

மார்ட்டின் ஸ்வெங்க் மேலும் கூறுகையில், “நாங்கள் நான்காவது காலாண்டிலும் எங்கள்
தயாரிப்புகளை தொடர இருக்கிறோம். ஒவ்வொரு மாதமும் ஒரு தயாரிப்பை அறிமுகப்படுத்த
முயற்சிக்கிறோம், அடுத்த ஆண்டும் இதேபோல் செயல்பட விரும்புகிறோம். . எங்கள்
வாடிக்கையாளர்களுடன் தொடர்ந்து நட்புறவோடு இருப்பதையும், தனித்துவமான மறக்கமுடியாத
தயாரிப்புகள், ஈடுஇணையற்ற சேவைகள் மற்றும் அருமையான அனுபவங்களை வழங்குவதன் மூலம் வாடிக்கையாளர்களைக் கவர்வதையும் எங்களுடைய நோக்கமாகக் கொண்டிருக்கிறோம். எங்கள் விற்பனை செயல்பாடுகள், குறிப்பாக பண்டிகை காலங்களில் சிறப்பாக இருந்தது எங்களுக்கு திருப்தி அளிக்கிறது. மேலும் இவையனைத்தும் மீண்டு வருவதற்கான ஆரம்ப அறிகுறிகளாக இருப்பதாக உணர்கிறோம்.” என்றார்.

வி-க்ளாஸ் எலைட்-டின் முக்கிய சிறப்பம்சங்கள் [Key product features]:

மசாஜ் அம்சமுள்ள செளகரியமான இருக்கைகள் மற்றும் க்ளைமேட் கண்ட்ரோல் வாய்ப்புகள்.

[Luxury seats with massage, climate control functions] குளிரூட்டி வசதியை கொண்ட நடுப்பக்க கன்சோல். [Centre console with refrigerated compartment]

பர்மெஸ்டர்® சரவ்ண்ட் சவுண்ட் சிஸ்டம். [Burmester® surround sound system]

மிகவும் அகலமான பனோரோமிக் ஸ்லைடிங் ரூப் [விருப்பத்தேர்வு] [Panoramic sliding roof (Optional)]

  • ஸ்டாண்டர்ட் ஆக வடிவமைக்கப்பட்ட 17 அங்குல அலாய் சக்கரங்கள் | 18 அங்குல அலாய் விருப்பத்தேர்வாக கிடைக்கிறது. [17 inch alloys standard |18 inch alloy as option]
  • செலக்ட்டிவ் டேம்பிங் சிஸ்டம் உடன் கூடிய எஜிலிட்டி கண்ட்ரோல் சஸ்பென்ஷன் [AGILITY CONTROL suspension with selective damping system]
  • பின்பக்க கண்ணாடியைத் தனியாக திறப்பதற்கு உதவும் ‘ஈஸி பேக் டெய்கேட்’ [EASY PACK

TAILGATE with separate Rear window opening]

  • சில்க் பீஜ் / கருப்பு ஆகிய வண்ணங்களில் லெதரினால் ஆன பயன்பாட்டு பொருட்களை
    வைக்கும் அப்ஹோல்ஸ்ட்ரி வாய்ப்புகள். [Leather upholstery options – Silk beige / Black]
  • உற்சாகமளிக்கும் லைட்டிங் [Ambient Lighting]
  • ஆக்ட்டி பார்க் அசிஸ்ட் உடன் கூடிய 360 டிகிரி கேமரா [360 degree camera with Active Park
    Assist]
  • எலெக்ட்ரிக் ஸ்லைடிங் கதவுகள். [Electric sliding doors]
  • பயன்பாட்டு அலங்காரப் பொருட்கள் [Accessories package] இயந்திரம் & எரிசக்தி ஆற்றல் மாற்றம் [Engine & Transmission] :
  • 120 kW/163 hp ஆற்றல் | 380 Nm டார்க்யூ | 11.1 விநாடிகளில் 0-100 | 1950 cc டீசல் என்ஜின். 9ஜி-ட்ரானிக் [9G-TRONIC]

பாதுகாப்பு சிறப்பம்சங்கள் [Safety features] :

  • 6 ஏர்பேக்குகள் | கவனமாக இருக்க உதவும் ‘அட்டென்ஷன் அசிஸ்ட் [Attention Assist] | 360
    டிகிரி கேமராவுடன் கூடிய சுலபமாக, பாதுகாப்பாக வாகனத்தை நிறுத்த உதவும் ‘ஆக்ட்டிவ்
    பார்கிங் அசிஸ்ட்’ [Active Parking Assist with 360 degree camera] ப்ரீ-சேஃப்® [PRE-SAFE®]

வண்ணங்கள் [Color variants] :

ஸ்டீல் ப்ளூ [Steel Blue] | செலநைட் க்ரே [Selenite Grey] | க்ராஃபைட் க்ரே [Graphite Grey ]
ஒப்சிடியன் ப்ளாக் மெட்டாலிக் [Obsidian Black Metallic] | கெவன்சைட் ப்ளூ மெட்டாலிக்
[Cavensite Blue Metallic] | ராக் க்ரிஸ்டல் வொயிட் மெட்டாலிக் [Rock Crystal White Metallic] |
ப்ரிலியண்ட் சில்வர் மெட்டாலிக் [Brilliant Silver Metallic]

இணையதளம் -www.mercedes-benz.co.in
ட்விட்டர் – @MercedesBenzInd
இன்ஸ்டாக்ராம் – @mercedesbenzind

மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியா பற்றி:

இந்தியாவில் 1994-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மெர்சிடிஸ்-பென்ஸ், தற்போது இந்தியாவில்
தனது 25-வது ஆண்டு விழாவை கொண்டாடுகிறது. இந்திய சொகுசு மற்றும் ஆடம்பர சொகுசு வாகனப்பிரிவில் முன்னோடியாக திகழும் இந்நிறுவனம் உலகளாவிய ஆட்டோமொபைல் துறையில் 130 ஆண்டுகளாக அதிநவீன புதுமையான கண்டுப்பிடிப்புகளை தனது தயாரிப்புகளில் புகுத்துவரும் பெரும் அனுபவம் கொண்டது. 2009-ம் ஆண்டு, புனேவுக்கு அருகில் இருக்கும் சக்கான் என்னுமிடத்தில் மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியாவின் உலகத்தரத்திலான உற்பத்தி தொழிற்சாலை 100 ஏக்கர் பரப்பளவில் ஆரம்பிக்கப்பட்டது.. ஜூன் 2015 முதல், மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியா, சக்கானில் ஆரம்பிக்கப்பட்டு புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்ட தனது தொழிற்சாலையில் உற்பத்தியை தொடங்கியது. மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியா நிறுவனம் மெர்சிடிஸ்-பென்ஸ் க்ளோபல் ப்ரொடெக்‌ஷன் நெட்வொர்க்கின் ஒரு அங்கமாகும். இந்நிறுவனம் பிரேசில், இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து மற்றும் வியட்னாம் ஆகிய நாடுகளில் CKD / MVP உற்பத்தி நெட்வொர்க்கில் முக்கிய பங்கை வகிக்கிறது. இந்த இடங்களில், மெர்சிடிஸ்-பென்ஸ் உள்நாட்டு சந்தைகளுக்காக பல்வேறு பிரிவுகளில் வாகனங்களை உற்பத்தி செய்கிறது. இதன் உற்பத்தி தொழிற்சாலை தற்போது 2,200 கோடி ரூபாய் முதலீட்டில் இயங்கி வருகிறது.

இந்தியாவில் சொகுசு வாகன உற்பத்தியாளர்களில் மிக அதிக உற்பத்தி திறன் கொண்ட மாபெரும்
நிறுவனமாகவும் திகழ்கிறது. இந்தியாவில் சொகுசு வாகன உற்பத்தியாளர்களில் 47 இந்திய நகரங்களில் 95 அவுட்லெட்களைக் கொண்ட மாபெரும் பரவலான நெட்வொர்க்களை கொண்ட நிறுவனமாக மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியா முக்கியத்துவம் பெற்று இருக்கிறது. டெல்லி, மும்பை, ஹைதராபாத், பெங்களூர், கொச்சி மற்றும் புனே உள்ளிட்ட 6 நகரங்களில் தனது ப்ரத்யேக AMG பெர்ஃபார்மன்ஸ் சென்டர்களின் [AMG Performance Centers] மூலம், மெர்சிடிஸ்-பென்ஸ் தனது துணை ப்ராண்ட்டான ஏஎம்ஜி பெர்ஃபார்மன்ஸ் இந்தியா முழுவதிலும் மிகவும் வலுவான ரீடெய்ல் நெட்வொர்க்கை பெற்றிருக்கிறது.

மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியாவின் முதன்மை திட்டம், 'என் மெர்சிடிஸ், மை சர்வீஸ்' [‘My
Mercedes, My Service’] 2016-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. சொகுசு வாகன பிரிவில் விற்பனைக்கு
பிறான சேவைகளுக்கான தளத்தில் டிஜிட்டல் முறையில் மேம்பட்ட விற்பனை அனுபவத்தை,
இதுவரையில்லாத சேவைகளை அளிக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் ‘மை மெர்சிடிஸ் மை சர்வீஸ்’ திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. டிசம்பர் 2017-ல், மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியா, தனது அனைத்து AMG பெர்ஃபார்மன்ஸ் சென்டர்களின் மூலம் சிறப்பான ப்ரதேகமான சேவைகளை வழங்குவதற்கென ‘பிட் ஸ்டாப் சர்வீஸ்’ ‘Pit Stop Service’] என்ற புதுமையான முயற்சியை ஆரம்பித்தது. ஏஎம்ஜி-க்கும் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சிகரமான வாகன உரிம அனுபவத்தை முன்னுரிமை கொடுத்து மிக விரைவாக, தனிப்பயனாக்கப்பட்ட முறையில் சேவைகளை வழங்குவதை நோக்கில் கொண்டு செயல்படுத்தப்பட்டது. 'மை மெர்சிடிஸ், மை சர்வீஸ்' வாடிக்கையாளர்களின் வாகன உரிம அனுபவத்தை பல்மடங்கு மேம்பட்ட வகையில் அதிகரிக்கவும், சொகுசு வாகனப் பிரிவில் விற்பனைக்கு பிறகான சேவைகளை தனித்துவத்துடன் வழங்குவதையும் நோக்கமாக கொண்ட்டு மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. இருக்கும் வகையில் பிரித்தெடுப்பாளராக விற்பனை அனுபவத்தை உருவாக்கியது. இந்திய வாடிக்கையாளர்களின் வாகனம் ஓட்டும் முறை குறித்த ஆழ்ந்த அனுபவ அறிவு, மற்றும் அதுசாந்த பிக்
டேடா [big data] ஆகியவற்றை பயன்படுத்தி, மெர்சிடிஸ்= பென்ஸ் தனது வாடிக்கையாளர்களுக்கு
குறைந்த செலவில் வாகன உரிம அனுபவத்தை அளிக்கிறது. இந்த முயற்சிகள் அனைத்திற்கும்
அங்கீகாரமளிக்கும் சான்றாக 2018 JD Power Sales Satisfaction Index (SSI) மற்றும் Customer
Satisfaction Index (CSI) ஆகிய விருதுகள் அமைந்திருக்கின்றன. இவ்விருதுகளில் மெர்சிடிஸ்-பென்ஸ் 903 புள்ளிகளைப் பெற்று முன்னிலைப் பெற்றிருக்கிறது.

மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியா தயாரிப்புகளில், உள்நாட்டிலேயே தயாரான மெர்சிடிஸ் மேபேக் S
560, S-க்ளாஸ், E-க்ளாஸ் லாங் வீல் பேஸ், C-க்ளாஸ், CLA சொகுசு செடான் மற்றும் GLA, GLE மற்றும் GLS  சொகுசு SUV-க்கள் [Mercedes Maybach S 560, S-Class, E-Class Long Wheelbase, C-Class, CLA
luxury sedans and the GLA, GLE and the GLS luxury SUVs] ஆகியன அடங்கும். CKD GLC மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தின் உள்ளூர் உற்பத்தியில் ஒன்பதாவது தயாரிப்பாக சேர்க்கப்பட்டுள்ளது. இறக்குமதி மூலமாக முற்றிலும் கட்டமைக்கப்பட்ட வாகன்ங்களில், A- க்ளாஸ், B-க்ளாஸ், V- க்ளாஸ், CLS, E- க்ளாஸ் Cabriolet, E- க்ளாஸ் All-Terrain,, S- க்ளாஸ் Coupe, C- க்ளாஸ் Cabriolet, C- க்ளாஸ் Cabriolet மற்றும் S 600 Guard the [A-Class, B-Class, V-Class, CLS, E-Class Cabriolet, E-Class All-Terrain, S-Class Coupé, C-Class Cabriolet, S-Class Cabriolet and the S 600 Guard] ஆகியவை அடங்கும்.

ஆஃப் ரோட் பிரிவின் மெர்சிடிஸ்-AMG G 63 பெர்ஃபார்மன்ஸ் கார்கள் AMG CLA 45, AMG C 63 S,
AMG E 63 S, AMG S 63 Coupe, AMG S 63 Sedan, AMG GLA 45, AMG GLC 43 Coupe, AMG GLE 43 Coupe, AMG
GT S, AMG GT R and AMG GT Roadster sports car, AMG SLC 43 மற்றும் AMG C 43. போன்ற மேம்பட்ட
செயல்திறன் மிக்க கார்களை உள்ளடக்கியுள்ளது. மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியாவின் சில்லறை
விற்பனையானது ஜனவரி- செப்டம்பர் 2019 -ம் ஆண்டில் 9,915வாகனங்கள் விற்பனையை
எட்டியிருக்கிறது. மெர்சிடிஸ்-பென்ஸ் பிராண்ட் குறிக்கோள் 'பெஸ்ட் நெவர் ரெஸ்ட்' ஆகும்.