சொகுசு கார்களுக்கான மிகப் பெரிய ஒருங்கிணைந்த டீலர்ஷிப் ஷோரூம் நிறுவனத்தைத் தொடங்கிய மெர்சிடிஸ் பென்ஸ்

மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா, இந்திய சொகுசு கார் சந்தையில் முன்னிலை தொடர்ந்து வகிக்கிறது: சென்னையில் இந்நிறுவனம் சொகுசு கார்களுக்கான மிகப் பெரிய ஒருங்கிணைந்த டீலர்ஷிப் ஷோரூம் நிறுவனத்தைத் தொடங்கியுள்ளது!

  • சொகுசு கார் பிராண்டில், தொடர்ந்து 5 ஆண்டுகளாக 10,000 சொகுசு கார்களை உற்பத்தி செய்த ஒரே நிறுவனம் என்ற சாதனையை தக்க வைத்துள்ளது.
  • மெர்சிடிஸ் பென்ஸ்சுந்தரம் மோட்டார்ஸ் தற்போது தமிழ்நாட்டில் மிகப் பெரிய 3 எஸ் டீலர்ஷிப் [3S luxury car dealerships]  நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்கிறது
  • சுமார் 72 ஆயிரம் சதர அடி பரப்பளவில், மிகவும் விசாலமாக அதிநவீன வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது | திறன் பயிற்சி பெற்ற 136 ஊழியர்கள் | 6 கார் பார்வைப்பகுதிகள் (car display) 63 சேவை தளங்கள் (service bays) | இந்த டீலர்ஷிப் 5 மாத காலத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது | ஆண்டுக்கு 15 ஆயிரம் கார்களை சர்வீஸ் செய்யும்  ஆற்றல், வசதிகளைக் கொண்டது.
  • அதிநவீன 3 எஸ் வசதிகள் ஆட்டோமொபைல் மையமான சென்னையில் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அருகில் உள்ள பகுதிகளில் இருந்து வாடிக்கையாளர்கள்  மிக எளிதில் அணுகக்கூடிய முக்கிய இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
  • இன்றைய நவீன சொகுசுத் தன்மையை வெளிப்படுத்தும் வகையில் சுந்தரம் மோட்டார்ஸ் நிறுவனம், இந்த டீலர்ஷிப் நிலையத்தின் உட்புற அலங்கார வடிவமைப்பை மிக அழகியலுடன் வடிவமைத்துள்ளது
  • எம்பி டிஜிட்டல் சைனேஜ் சிஸ்டம் (MB DIGITAL SIGNAGE) வசதி இங்கு உள்ளது: இந்த ஷோரூமின் உட்பகுதி அலங்கார வடிவமைப்புகள் பாரம்பரிய அம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ளன
  • ஷோரூம் சுவர்களில் வரையப்பட்டுள்ள ஓவியங்கள் உள்ளூர் தொடர்பான முக்கிய அம்சங்களை பிரதிபலிக்கும் வகையில், தமிழ்நாட்டின் பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் எடுத்துரைக்கிறது
  • வாடிக்கையாளர்களின் அனுபவம் தடைகள் இல்லாமல் சீரானதாக, இருக்கும் வகையில் ப்ரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு முனையமும் மதிப்புமிகு வாடிக்கையாளர்களின் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும்
  • புதிய சொகுசு கார்கள் வாங்குவதற்கான அனைத்து வசதிகளையும் கொண்ட ஒரே தளமாக இது அமைந்துள்ளது. புதிய கார்கள் விற்பனை, நிதி மற்றும் காப்பீடு [F&I], வர்த்தகம்[Trade-in], எம்பி சான்று பெற்ற கார்கள்[MB certified cars], அலங்காரப் பயன்பாட்டு இணைப்புகள் [accessories], சிறு நிலையங்கள் [boutiques], பிரீமியர் எக்ஸ்பிரஸ் பே [premiere express bay], குறிப்பிட்ட கால முறை பராமரிப்பு [periodic maintenance], பொது பழுது பார்த்தல் [general repairs], பழுது கண்டறிதல் பணிகள் [diagnosis jobs], எம்பி கார் கேர் [MB car care], உள்ளிட்ட அனைத்தும் இங்கும் மேற்கொள்ளப்படுகிறது. இது தவிர பாடி மற்றும் பெயிண்டிங் பணிகளும் [body and paint jobs] மேற்கொள்ளப்படுகின்றன.
  • வாடிக்கையாளர்களுக்கு மிக நவீன வசதிகளை, அதிக செளகரியங்களுடன் ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதற்காக நவீன டிஜிட்டல் முறையில் இந்த டீலர்ஷிப் நிறுவனம் வடிவமைக்கப்பட்டுள்ளது
  • ஆன்லைன் மூலம் முன் அனுமதி பெறுவதற்கு வசதியாக டிஜிட்டல் சர்வீஸ் டிரைவ் (Digital Service Drive (DSD) உருவாக்கப்பட்டுள்ளது.
  • டிஜிட்டல் ஆர்வலர்களுக்கு கலந்துரையாடல் டிஜிட்டல் டச் டேபிள் [Interactive digital touch-table] மற்றும் காணொலிகளை திரையிடும் சுவர்கள் சிறப்பான அனுபவத்தை அளிக்கும் வகையில் வடிவமக்கப்பட்டுள்ளது.
  • தென் இந்தியா முழுவதும் 9 ஷோரூம்கள் மூலம் சுந்தரம் மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுகிறது
  • சொகுசு கார் தயாரிப்பு நிறுவனங்கள் மத்தியில் மெர்சிடிஸ் பென்ஸ் வலுவான தொடர் செயல்பாடு கட்டமைப்பைக் கொண்டுள்ளது. இது 47 நகரங்களில் 97 ஷோரூம்களை கொண்டுள்ளது

சென்னை, அக்டோபர் 18:- 2019:- இந்தியாவின் மிகப் பெரிய சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ், சென்னையில் இன்று (அக்டோபர் 18, 2019) சென்னையின் மிகப் பெரிய கார் டீலர்ஷிப் நிறுவனங்களில் ஒன்றாகசுந்தரம் மோட்டார்ஸ் [Sundaram Motors] ’- தொடங்கியுள்ளது மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி மார்ட்டின் ஸ்வெங்க் [Mercedes-Benz India Managing Director and CEO Martin Schwenk] மற்றும் சுந்தரம் மோட்டார்ஸ் நிறுவனத்தின் செயல் இயக்குநர் சரத் விஜய ராகவன் [Sundaram Motors Executive Director Sharath Vijayaraghavan] ஆகியோர் இருவரும் இணைந்து இந்த டீலர்ஷிப் நிறுவனத்தைத் தொடங்கி வைத்தனர். சொகுசு கார் பிரிவை வளர்ச்சி அடையச் செய்து முக்கிய பெருநகரங்களில் அதிக வாடிக்கையாளர்களைச் சென்றடைய வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டை இதன் மூலம் மெர்சிடிஸ்பென்ஸ் மீண்டும் உறுதி செய்துள்ளது. இந்த அதி நவீன சொகுசு டீலர்ஷிப் ஷோரூம் பெரிய அளவில் 72 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், மிக விசாலமாக பரந்து விரிந்துள்ளது. 6 கார் டிஸ்பிளே மற்றும் 63 சர்வீஸ் பேகளுடன் உள்ள இந்த நிறுவனத்தில் ஆண்டுக்கு 15 ஆயிரம் கார்களை சர்வீஸ் செய்ய முடியும். இது இந்திய சந்தையில் மெர்சிடிஸ்பென்ஸ் நிறுவனத்தின் உத்வேகமனான அணுகுமுறையை, அதன் வளர்ச்சியை எடுத்துரைக்கும் வகையில் அமைந்திருக்கிறது. நகரத்தின் வாகன மையப் பகுதியில் அமைந்துள்ள இந்த டீலர்ஷிப் ஷோரும், 3 எஸ் (sales, service & sparesவிற்பனை, சேவை, உதிரிபாகங்கள்) முறையில் வாடிக்கையாளர்களுக்கு அனைத்து சேவைகளையும் அளிக்கிறது. இதனால் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்களின் தேவைகளை ஒரே தளத்தில் பூர்த்தி செய்யும் வசதிகளை கொண்ட டீலர்ஷிப்பாக இது கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி மார்டின் ஸ்வெங்க் (Martin Schwenk, Managing Director and CEO, Mercedes-Benz India) கூறுகையில்,மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியச் சந்தையில் மிக வேகமாக வளர்ச்சி அடையும் வகையில் உத்வேகத்துடன் செயல்பட்டு வருகிறது. இதனால் மிக வேகமாக வளர்ந்து வரும் சந்தையில் புதிய வாடிக்கையாளர்களைப் அதிகளவில் பெறுவதோடு, அவர்களும் எங்களது பிராண்டுடன் இணைந்து மகிழ்ச்சியுடன் உற்சாகமாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். மெர்சிடிஸ்பென்ஸ் சென்னையில் வலுவான செயல்பாட்டைக் கொண்டுள்ளது. தற்போது, சுந்தரம் மோட்டார்ஸ் நிறுவனம் எங்களது சந்தை செயல்பாடுகளை மேலும் வலுவாக்க உள்ளது. சென்னை நகரம் எங்களது முக்கிய சந்தையாகத் தொடர்ந்து இருந்துவருகிறது. எங்களது விற்பனையில் சென்னை முக்கிய பங்களிப்பை அளித்து வருகிறது. வாடிக்கையாளர்களை மையமாக கொண்ட அணுகுமுறை, நுட்பமான வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த தயாரிப்புகளை வழங்குதல், சிறந்த சேவை, மற்றும் ஈடுஇணை இல்லாத சொகுசு கார்  வைத்திருக்கும் உரிமையாளர் அனுபவம் ஆகியவற்றை தொடர்ந்து எங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்குவோம் என்ற உறுதியான நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.” என்றார்.

டீலர்ஷிப்புக்குள் நுழையும் இடம் முதல் கார்களை வாங்கும் முனையம் (delivery bay) வரையில் இந்த விற்பனை நிலையம் (ஷோரூம்) வாடிக்கையாளர்களுக்கு அனைத்து வகைகளிலும் மனதைக் கவரும் அனுபவத்தை வழங்கும். ஷோரூமில் உள்ள ஒவ்வொரு பொருட்களை பார்க்கும்போதும், அவற்றுக்கான பயன்பாடு மீது தனிக்கவனம் செலுத்தப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு. வாடிக்கையாளர்கள் அமரும் இடம் (lounge) அழகான இதமான மர அமைப்பில் தடுப்பு மேற்கூரை (baffle ceiling) வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு நவீன சொகுசு அனுபவத்தை வழங்கும். ’கஃபேமெர்சிடிஸ்[The ‘Cafe – Mercedes]  ஆனது அலை அலையான வெள்ளை மேற்கூரை அமைப்புடன், சீரான வளைவுகளுடனான முனையம் மற்றும் ஸ்டீல் அக்ஸெண்ட் மேல்தள வடிவமைப்பில் உள்ளது. இது அதி உன்னத சொகுசு அனுபவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கிறது. சில்லறை விற்பனை தளம், அலங்காரப் பயன்பாட்டு இணைப்பு பாகங்கள் மற்றும் சிறு நிலையங்கள் (boutiques) ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டு அனைத்து வயதினரையும் கவரும் வகையில் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ’உயர் சொகுசு அம்சங்கள் உள்ளூர் தன்மையுடன் இணைந்து இருக்க வேண்டும்[‘Luxury with a local connect’]   என்ற தத்துவத்தின் அடிப்படையில் பாரம்பரியமான கோவில்கள் உள்ளிட்டவற்றை வரைந்து தமிழக கலாசாரமும் சித்தரிக்கப்பட்டுள்ளது. “வெற்றிக்கான உறுதியுடன்” (will to victory) என்ற நோக்கில் இந்த ஷோரூம் முழுவதும் தத்துவார்த்த ரீதியில் அழகியலுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மார்டின் ஸ்வெங்க் மேலும் கூறுகையில்,கடந்த சில காலாண்டுகளில் பெருளாதாரம் மிதமாக  இருந்தபோதும் சொகுசு கார் பிரிவில் பென்ஸ் கார், சந்தையில் முதல் இடத்தில் நீடித்தது மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்துக்கு மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாகும். செப்டம்பர் மாதம் வலுவான செயல்பாட்டின் மூலம் சந்தை மீண்டு எழும் அறிகுறிகள் தெரிந்தன. ஏற்கெனவே சொகுசு கார் பிரிவில் 10 ஆயிரம் என்ற எண்ணிக்கையைத் தாண்டி விற்பனை ஆகி சாதனை படைத்த நிலையில் அக்டோபர் முதல் வாரத்தில் புதிய மைல் கல்லை மெர்சிடிஸ்பென்ஸ் அடைந்தது. வலுவான உற்பத்தி அணுகுமுறையுடன், அபாரமான தயாரிப்புகளுடன் அடுத்த காலாண்டில் எங்களது வளர்ச்சியைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று உறுதியாக நம்புகிறோம். வாடிக்கையாளர்களின் எண்ணங்களுக்கு ஈடு இணை இல்லாத வகையில் மதிப்பளித்து செயல்படுவோம்.” என்றார்.

சுந்தரம் மோட்டார்ஸ் நிறுவனத்தின் செயல் இயக்குநர் சரத் விஜயராகவன் [Sharath Vijayaraghavan, Executive Director, Sundaram Motors] கூறுகையில், மெர்சிடிஸ்  –பென்ஸ் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். எங்களது வாகனச் சந்தை செயல்பாடுகளை முக்கியமான சந்தையான சென்னையில் அதிகரிக்க இந்த முயற்சி உதவும். மெர்சிடிஸ்பென்ஸ் நிறுவனத்துடன் நீண்ட காலமாக இணைந்து செயல்படும் நிறுவனம் என்ற வகையில் இந்த சந்தை மற்றும் அருகில் உள்ள இடங்களில் செயல்பாட்டை விரிவாக்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம். மிக உயர்ந்த தரத்திலான தயாரிப்புகளையும், ஈடுஇணையற்ற வாகன உரிமையாளர் அனுபவத்தையும் வழங்க வேண்டும் என்பது சுந்தரம் மோட்டார்ஸ் நிறுவனத்தின் நோக்கமாகும். இந்த புதிய டீலர்ஷிப்பை எங்களது மேலான வாடிக்கையாளர்களுக்கு சமர்ப்பிக்கிறோம். சென்னையின் மிகப் பெரிய இந்த ’3 எஸ்ஒருங்கிணைந்த சொகுசு கார் டீலர்ஷிப் ஷோரூம் திறக்கப்பட்டிருப்பது, வாடிக்கையாளர்கள் மற்றும் மெர்சிடிஸ்பென்ஸ் நிறுவனத்துடனான எங்களது வலுவான பிணைப்பை எடுத்துரைக்கிறது.” என்றார்.

மெர்சிடிஸ்பென்ஸ், சுந்தரம் மோட்டார்ஸ் டீலர்ஷிப் ஷோரூமின் முக்கிய அம்சங்கள்:

  • சென்னையின் மிகப் பெரிய 3 எஸ் சொகுசு கார் டீலர்ஷிப்பாக திகழும் இது மிகக் குறைந்த கால அளவான 5 மாதங்களுக்குள் அமைக்கப்பட்டுள்ளது
  • இந்த அதிநவீன ஷோரூம், வாகன மையமான சென்னையில் அமைக்கப்பட்டுள்ளது. நகரம் மற்றும் புறநகர்ப்பகுதிகளில் இருந்து எளிதில் செல்லக் கூடிய இடத்தில் இது அமைக்கப்பட்டுள்ளது
  • பரந்து விரிந்து சுமார் 72 ஆயிரம் சதர அடி பரப்பளவில் இது அமைக்கப்பட்டுள்ளது. திறன் பயிற்சி பெற்ற 136 ஊழியர்கள், 6 வாகனத்தைக் காட்சிப்படுத்தும் பார்வை பகுதி (display), பாடி மற்றும் பெயிண்டிங்குக்காக 63 சேவை தளங்கள் (service bays) அமைக்கப்பட்டுள்ளது
  • ஆண்டுக்கு 15 ஆயிரம் கார்களை சர்வீஸ் செய்ய இயலும்
  • இந்த சொகுசு கார் டீலர்ஷிப் நிறுவனம் கஃபே மெர்சிடிஸ், மெர்சிடிஸ் பென்ஸ் இணைப்பு பாகங்கள், கூடுதல் வகைகள், வாடிக்கையாளர்கள் இருக்கும் இடங்கள், கேஃப் மெர்சிடிஸ், தனிச்சிறப்பான டெலிவரி பே உள்ளிட்டவற்றைக் கொண்டுள்ளது.

இணைய தளம்: www.mercedes-benz.co.in

டுவிட்டர்– @MercedesBenzInd

இன்ஸ்டாகிராம்: – @mercedesbenzind

Media Contact: Mercedes-Benz India Pvt. Ltd.:

Shekhar Das Chowdhury | shekhar.daschowdhury@daimler.com | +91 98508 3 6477

Vignesh Shankar |Vignesh.shankar@daimler.com | +91 7774036269

 

மெர்சிடிஸ்பென்ஸ் இந்தியா பற்றி:

இந்தியாவில் 1994-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மெர்சிடிஸ்பென்ஸ், தற்போது இந்தியாவில்  தனது 25-வது ஆண்டு விழாவை கொண்டாடுகிறது. இந்திய  சொகுசு மற்றும் ஆடம்பர வாகனப் பிரிவில் முன்னோடியாக திகழும் இந்நிறுவனம் உலகளாவிய ஆட்டோமொபைல் துறையில்  130 ஆண்டுகளாக அதிநவீன புதுமையான கண்டுப்பிடிப்புகளை தனது தயாரிப்புகளில் புகுத்துவரும் பெரும் அனுபவம் கொண்டது. 2009-ம் ஆண்டு, புனேவுக்கு அருகில் இருக்கும் சக்கான் என்னுமிடத்தில் மெர்சிடிஸ்பென்ஸ் இந்தியாவின் உலகத்தரத்திலான உற்பத்தி தொழிற்சாலை 100 ஏக்கர் பரப்பளவில் ஆரம்பிக்கப்பட்டது.. ஜூன் 2015 முதல், மெர்சிடிஸ்பென்ஸ் இந்தியாசக்கானில் ஆரம்பிக்கப்பட்டு புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்ட தனது தொழிற்சாலையில் உற்பத்தியை தொடங்கியது. மெர்சிடிஸ்பென்ஸ் இந்தியா நிறுவனம் மெர்சிடிஸ்பென்ஸ் க்ளோபல் ப்ரொடெக்ஷன் நெட்வொர்க்கின் ஒரு அங்கமாகும். இந்நிறுவனம் பிரேசில், இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து மற்றும் வியட்னாம் ஆகிய நாடுகளில் CKD / MVP உற்பத்தி நெட்வொர்க்கில் முக்கிய பங்கை வகிக்கிறது. இந்த இடங்களில், மெர்சிடிஸ்பென்ஸ் உள்நாட்டு சந்தைகளுக்காக பல்வேறு பிரிவுகளில்  வாகனங்களை உற்பத்தி செய்கிறது. இதன் உற்பத்தி தொழிற்சாலை தற்போது 2,200 கோடி ரூபாய் முதலீட்டில் இயங்கி வருகிறது. இந்தியாவில் சொகுசு வாகன உற்பத்தியாளர்களில்  மிக அதிக உற்பத்தி திறன் கொண்ட மாபெரும் நிறுவனமாகவும் திகழ்கிறது.

இந்தியாவில் சொகுசு வாகன உற்பத்தியாளர்களில் 47 இந்திய நகரங்களில் 96 அவுட்லெட்களைக் கொண்ட மாபெரும் பரவலான  நெட்வொர்க்களை கொண்ட நிறுவனமாக மெர்சிடிஸ்பென்ஸ் இந்தியா முக்கியத்துவம் பெற்று இருக்கிறது. டெல்லி, மும்பை, ஹைதராபாத், பெங்களூர், கொச்சி மற்றும் புனே உள்ளிட்ட 6 நகரங்களில் தனது ப்ரத்யேக AMG பெர்ஃபார்மன்ஸ் சென்டர்களின் [AMG Performance Centers] மூலம், மெர்சிடிஸ்பென்ஸ் தனது துணை ப்ராண்ட்டான ஏஎம்ஜி பெர்ஃபார்மன்ஸ் இந்தியா முழுவதிலும் மிகவும் வலுவான ரீடெய்ல் நெட்வொர்க்கை பெற்றிருக்கிறது.

மெர்சிடிஸ்பென்ஸ் இந்தியாவின் முதன்மை திட்டம், ‘என் மெர்சிடிஸ், மை சர்வீஸ்[‘My Mercedes, My Service’] 2016-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. சொகுசு வாகன பிரிவில் விற்பனைக்கு பிறான சேவைகளுக்கான தளத்தில் டிஜிட்டல் முறையில் மேம்பட்ட விற்பனை அனுபவத்தை, இதுவரையில்லாத சேவைகளை அளிக்க வேண்டுமென்ற நோக்கத்துடன்மை மெர்சிடிஸ் மை சர்வீஸ்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. டிசம்பர் 2017-ல், மெர்சிடிஸ்பென்ஸ் இந்தியா, தனது அனைத்து AMG பெர்ஃபார்மன்ஸ் சென்டர்களின் மூலம் சிறப்பான ப்ரதேகமான சேவைகளை வழங்குவதற்கெனபிட் ஸ்டாப் சர்வீஸ்‘Pit Stop Service’]  என்ற புதுமையான முயற்சியை ஆரம்பித்தது. ஏஎம்ஜிக்கும் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சிகரமான வாகன உரிம அனுபவத்தை முன்னுரிமை கொடுத்து மிக விரைவாகதனிப்பயனாக்கப்பட்ட முறையில் சேவைகளை வழங்குவதை நோக்கில் கொண்டு செயல்படுத்தப்பட்டது. ‘மை மெர்சிடிஸ், மை சர்வீஸ்வாடிக்கையாளர்களின் வாகன உரிம அனுபவத்தை பல்மடங்கு மேம்பட்ட வகையில் அதிகரிக்கவும்சொகுசு வாகனப் பிரிவில் விற்பனைக்கு பிறகான சேவைகளை தனித்துவத்துடன் வழங்குவதையும் நோக்கமாக கொண்ட்டு மேற்கொள்ளப்பட்டு இருக்கிறதுஇருக்கும் வகையில் பிரித்தெடுப்பாளராக விற்பனை அனுபவத்தை உருவாக்கியது. இந்திய வாடிக்கையாளர்களின் வாகனம் ஓட்டும் முறை குறித்த ஆழ்ந்த அனுபவ அறிவு, மற்றும் அதுசாந்த பிக் டேடா [big data]  ஆகியவற்றை பயன்படுத்தி, மெர்சிடிஸ்= பென்ஸ் தனது வாடிக்கையாளர்களுக்கு குறைந்த செலவில் வாகன உரிம அனுபவத்தை அளிக்கிறது. இந்த முயற்சிகள் அனைத்திற்கும் அங்கீகாரமளிக்கும் சான்றாக 2018 JD Power Sales Satisfaction Index (SSI) மற்றும் Customer Satisfaction Index (CSI) ஆகிய விருதுகள் அமைந்திருக்கின்றன. இவ்விருதுகளில் மெர்சிடிஸ்பென்ஸ் 903 புள்ளிகளைப் பெற்று முன்னிலைப் பெற்றிருக்கிறது.

மெர்சிடிஸ்பென்ஸ் இந்தியா தயாரிப்புகளில்உள்நாட்டிலேயே தயாரான மெர்சிடிஸ் மேபேக் S 560, S-க்ளாஸ், E-க்ளாஸ் லாங் வீல் பேஸ், C-க்ளாஸ், CLA சொகுசு செடான் மற்றும் GLA, GLE மற்றும் GLS சொகுசு SUV-க்கள் [Mercedes Maybach S 560, S-Class, E-Class Long Wheelbase, C-Class, CLA luxury sedans and the GLA, GLE and the GLS luxury SUVs] ஆகியன அடங்கும். CKD GLC மெர்சிடிஸ்பென்ஸ் நிறுவனத்தின் உள்ளூர் உற்பத்தியில்  ஒன்பதாவது தயாரிப்பாக சேர்க்கப்பட்டுள்ளது. இறக்குமதி மூலமாக முற்றிலும் கட்டமைக்கப்பட்ட வாகன்ங்களில், A- க்ளாஸ், B- க்ளாஸ், V- க்ளாஸ், CLS, E- க்ளாஸ் Cabriolet, E- க்ளாஸ் All-Terrain,, S- க்ளாஸ் Coupe, C- க்ளாஸ் Cabriolet, C- க்ளாஸ் Cabriolet மற்றும் S 600 Guard the [A-Class, B-Class, V-Class, CLS, E-Class Cabriolet, E-Class All-Terrain, S-Class Coupé, C-Class Cabriolet, S-Class Cabriolet and the S 600 Guard]  ஆகியவை அடங்கும்

ஆஃப் ரோட் பிரிவின் மெர்சிடிஸ்-AMG G 63 பெர்ஃபார்மன்ஸ் கார்கள் AMG CLA 45, AMG C 63 S, AMG E 63 S, AMG S 63 Coupé, AMG S 63 Sedan, AMG GLA 45, AMG GLC 43 Coupé, AMG GLE 43 Coupé, AMG GT S, AMG GT R மற்றும் AMG GT Roadster sports கார், AMG SLC 43 மற்றும் AMG C 43 போன்ற  மேம்பட்ட செயல்திறன் மிக்க கார்களை உள்ளடக்கியுள்ளது. மெர்சிடிஸ்பென்ஸ் இந்தியாவின் சில்லறை விற்பனையானது ஜனவரிடிசம்பர் 2018-ம் ஆண்டில் 15,538 வாகனங்கள் விற்பனையை எட்டியிருக்கிறது. 2019-ம் ஆண்டில், மெர்சிடிஸ்பென்ஸ் பிராண்ட் குறிக்கோள்பெஸ்ட் நெவர் ரெஸ்ட்ஆகும்.