போட்டித் தேர்வுகளுக்கு சவால்கள் பெரிதல்ல! வழிகாட்டுகிறது கிரெனென் அகாடமி.

தென் இந்தியாவின் உலகத்தரம் வாய்ந்த போட்டித் தேர்வு பயிற்சி மையமாகத் திகழும்  கிரெனென் அகாடமி சென்னையில் தனது தலைமை பயிற்சி மையத்தை தொடங்கி உள்ளது. ஏற்கனவே திருச்சி, கோயம்புத்தூரில் மக்கள் மத்தியில்  மிகவும் அறியப்பட்ட போட்டித் தேர்வு பயிற்சி மையமாக கிரெனென் செயல்பட்டு வருகிறது. கிரெனென் அகாடமியில், அனுபவமும் திறமையும் வாய்ந்த பயிற்றுனர்கள், பேராசிரியர்கள் மாணவர்களை போட்டித் தேர்வுகளுக்கு தயார்படுத்துகிறார்கள்.
அகில இந்திய மற்றும் சர்வதேச அளவில் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் தென் இந்திய மாணவர்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றனர். பல்வேறு பாடத்திட்டங்களைக் கொண்டுள்ள தமிழகத்தில், NEET, ICWA, ACWA, CLAT போன்ற தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்வது பெரும் சவாலாக உள்ளது. கடந்த ஆண்டு நடத்தப்பட்ட NEET-UG தேர்வில் தமிழகத்தை சேர்ந்த ஒரு மாணவர் கூட முதல் 25 இடங்களில்  இடம்பெறாதது  மிகப்பெரும் சோகம். பள்ளி பாடத்திட்டத்திற்கும் போட்டித்தேர்வு பயிற்சிகளுக்கும் உள்ள இடைவெளியே இதற்குக்  காரணம்.
பெருநகரங்களோடு ஒப்பிடுகையில், சிறிய மற்றும் நடுத்தர நகரங்களில்  போட்டித் தேர்வுகளுக்கான சிறந்த, தரமான பயிற்சி மையங்கள் இல்லை என்றே சொல்லவேண்டும். இந்தக் குறையை போக்கும் முயற்சியிலும் கிரெனென் அகாடமி தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளது. அதற்காக, விரைவில் தென் இந்தியா முழுவதும் சிறிய, நடுத்தர நகரங்களின் மூலைமுடுக்குகள் எங்கும் கிரெனென் தனது கிளைகளை தொடங்க உள்ளது. இதன்மூலம், கிராமப்புற மற்றும் நகர்ப்புற மாணவர்கள் போட்டித் தேர்வுகளை எளிதில் எதிர்கொள்ளும் வகையில்  கிரெனென் அகாடமியில் பயிற்சி பெறமுடியும். NEET, ICWA, ACWA, CLAT போன்ற எல்லா போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகளையும் ஒரே இடத்தில் பெறமுடியும் என்பது கிரெனென் அகாடமியின் சாதகமான  அம்சமாகும்.
மேம்படுத்தப்பட்ட, புதிய மற்றும் நவீன தொழில்நுட்பம் மூலமாக கிரெனென் அகாடமி பயிற்சி அளிக்கிறது. தேர்வுகளில் கேட்கப்படும் கடினமான, கூர்மையான கேள்விகளையும் எளிதில் மாணவர்கள் எதிர்கொள்வதற்கான உத்திகளையும், வழிகளையும் கிரெனென் பயிற்றுவிக்கிறது. பயிற்சி பெற்ற பேராசிரியர்கள் வழங்கும் நுண்ணிய பயிற்சிகளால் மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற்று, தங்கள் இலக்கை எட்டமுடியும். கிராமப்புற மாணவர்களும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் வெளிப்படையாக, எளிமையாக வழங்கும் பயிற்சிகளால் எவ்வளவு பெரிய சவாலான கேள்விகளையும் மாணவர்கள் எதிர்கொண்டு வெற்றிவாகை சூடலாம்.
ஏழை, எளிய மாணவர்களும் இத்தகைய பயிற்சியை பெறும்வகையில் கிரெனென் அவர்களுக்கு கட்டணச் சலுகைகளையும், கல்வி ஊக்கத் தொகையையும் வழங்குகிறது. இதனால் அடித்தட்டு மற்றும் வறுமைக்கோட்டில் உள்ள மாணவர்களும் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவதற்கான வழியை  கிரெனென் ஏற்படுத்திக்கொடுக்கிறது.
கிரானைட், பேஷன், ஊடகம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைத்துவரும் கிரெனென் குழுமத்தின் தலைவராக தொழிலதிபர் திரு எஸ்.கிருஷ்ணன் செயல்பட்டு வருகிறார். பட்டயக் கணக்கராக அறியப்பட்ட கிருஷ்ணன், தொழில் துறையில் பல  சாதனைகளை படைத்து திகழ்பவர். தற்போது கிரெனென் அகாடமியை உலகத்தரத்திலான போட்டித் தேர்வு பயிற்சி மையமாக வளர்த்தெடுக்கும் பணியில் கிருஷ்ணன் முனைப்புக் காட்டிவருகிறார்.
கிரெனென் அகாடமி சார்பில் சென்னையில் ‘தொழில் படிப்பின் நுழைவாயில்’ என்ற  தலைப்பில் கலந்தாய்வு நடைபெற்றது. இதில் கண் அறுவைசிகிச்சை நிபுணர், மருத்துவர் மோகன் ராஜன் (ராஜன் கண் மருத்துவமனை), ஒட்டுறுப்பு அறுவைசிகிச்சை ஆலோசகர், மருத்துவர் ஷிவராம் பரத்வாஜ், (அப்பல்லோ மருத்துவமனை), கல்வியாளர் திரு நமச்சிவாயம், கல்வியாளர் திரு நீலகண்ட பிள்ளை, வழக்கறிஞர் திரு அரவிந்த் சுப்பிரமணியன், அண்ணா ஆதர்ஷ் பள்ளியின் முதல்வர் திருமதி என்.ஜெயலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்று கருத்துகளை முன்வைத்தனர். மருத்துவர்  லலிதா பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.