கண்மூடித்தனமான விலையேற்றம், 4ஜி திட்டங்களின் மீது ஜியோ

0

இந்திய தொலைத் தொடர்பு துறையின் சமீபத்திய நுழைவான ரிலையன்ஸ் ஜியோ, தனக்கே உரிய மாபெரும் பகுதியை சந்தையில் ஆட்கொண்ட நிலைப்பாட்டில் மென்மேலும் வளர்ந்துகொண்டே போகிறது. அந்த பகுதியாக முகேஷ் தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதன் பிரபலமான 84 நாட்களுக்கு செல்லுபடியாகும் ரூ.399/- என்ற தண் தாணா தான் திட்டத்தின் விலையை கடுமையாக உயர்த்தியுள்ளது.

இன்று முதல் (வியாழன்) அமலுக்கு வரும் இந்த திட்டத்தின் விலை உயர்வு என்ன.? விலை உயர்வால் நன்மைகளும் கூடுமா.? வேறென்ன திட்டங்கள் திருத்தியமைக்கப்பட்டுள்ளன.? ரூ.399/- என்ற ஜியோவின் பிரதான ரீசார்ஜ் இனி ரூ.459/-க்கு கிடைக்கும்.

இந்த திட்டத்தை அணுகும் சந்தாதாரர்கள் அதே வழக்கமான 1ஜிபி அளவிலான 4ஜி டேட்டாவை பெறுவார்கள் என்று நிறுவனத்தின் வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட தகவல் கூறுகிறது. மறுபக்கம் ஜியோவின் ரூ.149/- திட்டமானது, 2 ஜிபி அளவிலான 4ஜி டேட்டாவை வழங்கி வந்த நிலைப்பாட்டில் தற்போது திருத்தப்பட்ட திட்டங்களின் கீழ் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் 4 ஜிபி அளவிலான 4ஜி டேட்டாவை வழங்கும் அதாவது டேட்டா அளவை இரட்டிப்பாக வழங்கும்.

ரிலையன்ஸ் ஜியோ வலைத்தளத்தின்படி, ரூ.399/- திட்டத்தை அணுகவதற்கான கடைசி நாள் (அக்டோபர் 18, 2017) நேற்றே முடிந்துவிட்ட நிலைப்பாட்டில் இனி பயனர்கள் ரூ.459/-திட்டத்தை தான் அணுக வேண்டியது இருக்கும். திருத்தப்பட்ட புதிய ஜியோ ரூ.459 திட்டம், ஒரு நாளைக்கு 1 ஜிபி அதிவேக தரவை 84 நாட்களுக்கு வழங்கும், உடன் முந்தைய ரூ.399/- திட்டம் வழங்கிய அதே அழைப்பு நன்மைகளையும் வழங்கும்.

மறுகையில், குறைந்த விலை மற்றும் குறுகியகாலத் திட்டங்களுக்கு ஜியோ அதன் கட்டணத்தை குறைத்துள்ளது. அதன்படி, ரூ.52 ஒரு வாரம் செல்லுபடியாகும் மற்றும் ரூ.98/- ஆனது இரண்டு வாரங்களுக்கு அதன் வாடிக்கையாளர்களுக்கு இலவச குரல், எஸ்எம்எஸ், வரம்பற்ற தரவு (0.15 ஜிபி தினசரி) வழங்கும் ஜியோவின் அனைத்து திட்டங்களும் தொடர்ந்து ரோமிங் உட்பட அனைத்து வகையான வரம்பற்ற குரல் அழைப்புகளையும் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.149/- திட்டமானது 4ஜிபி டேட்டா வழங்குவதால் இனி இந்த திட்டம் தான் பெரும்பாலான மக்களால் தேர்நதெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருத்தப்பட்ட ரூ.509/- திட்டமானது நாள் ஒன்றுக்கு 2ஜிபி அளவிலான 4ஜி தரவை 56 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் வழங்கி வந்த நிலைப்பாட்டில் இனி 49 நாட்களாக குறைக்கப்பெற்றுள்ளது. ஆக அதன் அதிவேக 112 ஜிபி டேட்டா 98 ஜிபி ஆக குறைக்கப்படுகிறது. பதிவிறக்க வேகத்தில் வெட்டு இல்லாமல் 90 ஜிபி அளவிலான 4ஜி டேட்டாவை வழங்கி வந்த ரூ.999/- திட்டமானது இனி மூன்று மாதங்களுக்கு 60ஜிபி அதிவேக தரவு மட்டுமே வழங்கும்.

Spread the love

Comments are closed.