கிளாமர் வேடத்தில் நடிக்க ஆர்வம் இல்லை – ‘மேயாத மான்’ பிரியா உறுதி

செய்தி வாசிப்பாளராக இருந்து, சின்னத்திரை சீரியல் நடிகையானவர் பிரியா பவானி சங்கர். இவர் நடித்த சீரியல்களுக்கு பெண்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது.  இந்நிலையில், மேயாதமான் படத்தின் மூலம் பெரிய திரைக்குள் நுழைந்தார். இவர் சினிமாவுக்கு வந்து நடித்த முதல் படத்துக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.

இதனால் பிரியாவுக்கு பட வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளது. இந்நிலையில், ஒரு தொலைக்காட்சியின் காமெடி நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்தார் பிரியா. அப்போது, கிளாமர் வேடத்தில் நடிப்பீர்களா? என்றொரு கேள்வி வரவே, அதற்கு விளக்கம் அளித்த பிரியா கூறுகையில்,

சின்னத்திரை ரசிகர்களுக்கு நன்கு தெரிந்த நான், மேயாத மான் படம் மூலமாக பெரிய திரைக்கு அறிமுகமானேன். இப்படி ஒரு சிறப்பான வரவேற்பை ரசிகர்களிடமிருந்து நான் எதிர்பார்க்கவே இல்லை. இந்தப் படத்தின் வெற்றியால் பல படங்களில் ஒப்பந்தம் செய்ய வாய்ப்பு வருகிறது. ஆனால், நான் எந்த அவசரமும் காட்டவில்லை! எனக்கு ஏற்ற கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்க விரும்புகிறேன். கிளாமராக நடிக்க எனக்கு ஆர்வமில்லை என்றார்.