செப்டம்பர் 15 to 19 வரை ஐசிஐசிஐ லொம்பார்ட் ஜெனரல் இன்ஷூரன்ஸ் கம்பெனி லிமிடெட்

ஐசிஐசிஐ லொம்பார்ட் ஜெனரல் இன்ஷூரன்ஸ் கம்பெனி லிமிடெட், பொதுபங்கு வெளியீட்டை (Initial Public Offer) 2017. ரூ. 10 முக மதிப்பு கொண்ட 86,247,187 பங்குகளை விற்பனை செய்கிறது. இதில், 31,761,478 பங்குகளை ஐசிஐசிஐ பேங்க், 54,485,709 பங்குகளை எஃப்ஏஎல் கார்ப்பரேஷன் (FAL Corporation)  விற்பனை செய்கிறது. இவை இரண்டும் சேர்ந்து நிறுவனர் பங்கு மூலதனம் என்கிற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. 4,312,359 பங்குகள் ஐசிஐசிஐ பேங்க் பங்கு முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது.                     

பங்குவிலைப்பட்டை (Price Band) ரூ. 651 முதல் ரூ.661 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 22 பங்குகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு மேல் தேவைப்பட்டால் 22-களின் மடங்குகளில் விண்ணப்பிக்கலாம். ஏலம் ஆரம்பிக்கும் நாளுக்கு, ஒரு நாள் முன்னதாக முதலீட்டாளர்கள்  ஏலம் கேட்க ஆரம்பிக்கலாம். தகுதி வாய்ந்த நிறுவன முதலீட்டாளர்களுக்கு 50 சதவிகிதத்துக்கு அதிகம் இல்லாமல் பங்குகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 

இதில் சுமார் 33 சதவிகிதம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. நிகர பங்கு விற்பனையில் நிறுவனம் சாராத முதலீட்டாளர்களுக்கு 15 சதவிகிதத்திற்கு குறையாமல் பங்குகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. நிகரபங்கு விற்பனையில் நிறுவனம் சிறு முதலீட்டாளர்களுக்கு  35 சதவிகிதத்திற்கு குறையாமல் பங்குகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.  

அஸ்பா  முறைகள் பங்குகள் விற்பனை செய்யப்படும். இம்முறையில் பங்குகள், ஒதுக்கீடு செய்யப்பட்டால் மட்டுமே முதலீட்டாளர் வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கப்படும். அதே நேரத்தில், விண்ணப்பத்துக்கான தொகை வங்கிகணக்கில் முடக்கி   வைக்கப்பட்டிருக்கும். இந்த வசதியை தங்களின் வங்கி மூலம் அனைத்து முதலீட்டாளர்களும் (ஆங்கர் முதலீட்டாளர்கள் தவிர) பயன்படுத்திக் கொள்ளலாம்.