முட்டையின் கொள்முதல் விலை சரிவு

முட்டையின் கொள்முதல் விலை சரிவு

முட்டை விலை சமீப நாட்களாக உயர்ந்து வந்தது. அரசுப் பள்ளிகளில் சத்துணவு திட்டத்திற்கான முட்டைகளுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உருவானது. ஒரு முட்டை கொள்முதல் விலை ரூ.4.35ல் இருந்து, ரூ.5.16க்கு அதிகரித்தது. இதனால் முட்டையின் விலை ரூ.6க்கு மேல் உயர்ந்தது. இதற்கிடையில் தற்போது, சபரிமலை கோவிலுக்கு வேண்டி மாலை போடுபவர்கள், சுத்த சைவர்களாக மாறும் நிலை நிலவுகிறது. இதனால் தற்போது, கொள்முதல் விலை ரூ.4.65க்கு குறைந்துள்ளது. இதன் காரணமாக கடைகளில் விற்கப்படும் முட்டைகளின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது.