கொரோனா விழிப்புணர்வு ஆலோசனைகள் மற்றும்   நிவாரண பொருட்களை ஊடகவியல் நண்பர்களுக்கு  வழங்கிய புற்றுநோய்  மருத்துவர் திருமதி. டாக்டர். அனிதா ரமேஷ் 

ஊடகவியலாளர்களுக்கு சமூக ஆர்வலரும், புற்றுநோய் சிகிச்சை நிபுணருமான மருத்துவர் அனிதா ராமேஷ் கொரோனா வைரஸ் பற்றியும், அதனால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து எப்படி தற்காத்துக்கொள்ளலாம் என்ற ஆலோசனைகளை வழங்கினார். 
நாட்டு நிலவரங்களை அவ்வப்போது பரபரப்பாக ஒளிபரப்புவதும், சுவாரஸ்சியமான தகவல்கள், அறியவகை காட்சிகள், பிரபலங்களின் பேட்டிகள் என பதிவிடுவது ஊடக நிருபர்கள் தான்.
நாடு முழுவதும், கொரோனா வைரஸ் பரவல் இருப்பதால் கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கு அமலில் உள்ளது. அவர்களின் சிரமத்திற்க்கு தோல்கொடுக்க சமூக ஆர்வலரும், புற்றுநோய் சிகிச்சை நிபுணருமான மருத்துவர் அனிதா ரமேஷ் முன்வந்துள்ளார்.
அந்த வகையில் சென்னையில் பணியாற்றும் ஊடகவியலாளர் நிருபர்களுக்கு கொரோனா பற்றிய விழிப்புணர்வும், அவற்றால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன என்பது குறித்து விளக்கமளித்தார்.
அன்றாடம் செய்தி சேகரிக்க வெவ்வேறு இடங்களுக்கு செல்லும் பத்திரிகையாளர்கள் தங்களை எப்படி தற்காத்துகொள்ள வேண்டும், குடும்ப உறுப்பினர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்றும் விளக்கமளித்தார்.
இதனை தொடர்ந்து  அவர்களுக்கு தேவையான, வீட்டு உபயோக பொருட்களான அரிசி, பருப்பு அடங்கிய தொகுப்பினை ஊடகவியலாளர் நிருபர்களுக்கு புற்று நோய் சிகிச்சை நிபுணர் மருத்துவர் அனிதா ரமேஷ், ரஜினி மக்கள் மன்றத்தின் தென் சென்னை (கிழக்கு)மாவட்டச் செயலாளர் சினோரா பி.எஸ்.அசோக் உள்ளிட்டோர் வழங்கினர்.