‘விஸ்வாசம்’ படத்தால் மகிழ்ச்சியில் திளைக்கும் விநியோகஸ்தர்கள்

0

வர்த்தக புள்ளி விபரங்கள் மற்றும் வசூல் கணக்குகள் ஒரு படத்தின் வெற்றிக்கு தெளிவற்ற ஒரு உறுதிமொழியை போல இருக்கும். விநியோகஸ்தர்கள் உணர்ச்சி ரீதியாக மகிழ்ச்சியாக இருப்பது தான் உண்மையான வெற்றி என்பதை நிரூபிக்கிறது. பல ஆண்டுகளாக இத்தகைய நிகழ்வுகள் தான் ஒரு திரைப்படத்தின் வெற்றிகரமான நிலையை அறிவித்திருக்கின்றன. அஜித்குமார் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ படத்தில் இது அனைத்துமே நடந்துள்ளது, அதன் விநியோகஸ்தர்கள் படத்திற்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வரவேற்பால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

வழக்கமான சொல்லப்படும் ஒரு புகழுரையாக இல்லாமல், விநியோகஸ்தர்கள் எஸ் பிக்சர்ஸ் ஸ்ரீனிவாசன், சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன் மற்றும் சிலர் இன்று தயாரிப்பாளர் சத்யஜோதி ஃபிலிம்ஸ் டி.ஜி.தியாகராஜன் மற்றும் இயக்குனர் சிவாவை சந்தித்தனர். அப்போது படத்திற்கு ரசிகர்கள் குறிப்பாக குடும்பங்களிடம் கிடைத்திருக்கும் வரவேற்புக்கு மாலை அணிவித்து தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். அஜித்குமார் நடித்த படங்களிலேயே விஸ்வாசம் மிகப்பெரிய வெற்றிப்படமாக இருக்கும் என்றும் விஸ்வாசத்தை பாராட்டினர். வழக்கமாக, அஜித்குமார் நடித்த படங்களுக்கு முதல் நாளில் அவரின் வெறித்தனமான ரசிகர்களே திரையரங்கை ஆக்கிரமித்திருப்பார்கள். ஆனால், இந்த முறை குடும்பங்கள் அதுவும் அதிகாலை காட்சிக்கே வந்திருந்தது விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

Spread the love

Comments are closed.