முதன் முறையாக Live Show நடத்தும் தேனிசைத் தென்றல் “தேவா”

முதன் முறையாக Live Show நடத்தும் தேனிசைத் தென்றல் “தேவா”

தேனிசைத் தென்றல் “தேவா ” – முதன் முறையாக Live Show – பண்ணுகிறார்.

400 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள தேனிசை தென்றல் தேவா இதுவரை இந்தியாவில்
Live Show நடத்தியதில்லை – முதன் முறையாக பாண்டிச்சேரியில் மிகப் பிரம்மாண்டமான
இசைவிழா நடத்த உள்ளார் . தன்னுடன் திரைப்படங்களுக்கு பணியாற்றிய சகோதரர்கள் சபேஷ்
முரளி , சிவா சம்பத் , மகன் ஸ்ரீகாந்த் தேவா ஆகியோருடன் ஆட்டம் , பாட்டம் , கொண்டாட்டம்
என விருந்து படைக்க உள்ளார் .

இதுவரை Live Show பண்ண ஒத்துக்காத தேனிசை தென்றல் தேவா – Show பண்ண
ஒத்துக்கொண்ட தன் காரணம் SRBS Entertainment – தான் .

யார் இந்த SRBS Entertainment ?
சுரேஷ் மற்றும் அவரது சகோதரர்கள் இந்த SRBS Entertainment – ஐ நடத்தி வருகிறார்கள். சுரேஷ் திரைப்பட ஸ்டில்போட்டோகிராபர் – நிறைய படங்களில் பணியாற்றி உள்ளார். சினிமாக்காரர்களுக்கு இவர் தெரிந்த முகம் – SRBS Modeling Studio நடத்தி வந்தவர் SRBS
Entertainment என்ற பெயரில் கடந்த மூன்று வருடங்களாக பண்ருட்டி , விழுப்புரம் , கடலூர்
போன்ற ஊர்களில் நடிகர் , நடிகைகள் மற்றும் சினிமா கலைஞர்களை வைத்து பிரமாண்டமாய்
கலைநிகழ்ச்சிகளை நடத்தி உள்ளார் . –

தேனிசை தென்றல் தேவாவை Live Show பண்ண இவர்கள் அணுகிய போது முதலில் யோசித்த
தேவா அவர்கள் , இவர்கள் நடத்தியுள்ள பண்ருட்டி , விழுப்புரம் , கடலூர் நிகழ்ச்சிகளை பார்த்து
ஆச்சரியப்பட்டு உடனே கூப்பிட்டு சம்மதம் தெரிவித்தார் .

தேவா OK சொன்ன வுடன் SRBS Entertainment வுடன் Preniss International Pvt Ltd என்ற
கம்பெனியும் இணைந்து இந்த Show – வை நடத்த முன் வந்துள்ளது .

தேவா Live show – வின் அறிமுகவிழா வடபழனி சிகரம் ஹாலில் மிக சிறப்பாக நடைப்பெற்றது .
அதில் பேசிய தேவா , பாண்டிச்சேரி ரசிகர்களின் மத்தியில் முதன் முதலில் Live Show பண்ணுவதில்
பெரு மகிழ்ச்சியடைகிறேன் . அவர்கள் வாழ்வில் மறக்கமுடியாத இசை விழாவாக இந்த Deva Live
Show நிச்சயமாக இருக்கும் என்றார் .

SRBS சுரேஷ் கூறும் போது ஒண்ணு நம்ம சாதிக்கணும் இல்ல சாதிச்சவங்களை வச்சி சாதிக்கணும்
. இதுதான் என்னோட கொள்கை அந்த வகையில் தேனிசை தென்றல் தேவா சாரை கமிட் பண்ணி
Live show நடத்துறதே ஒரு சாதனைதான்னு நான் நினைக்கிறேன் . இதெல்லாம் என் ஒருத்தனால
நடக்கல – எனக்கு பின்னாடி என் Brothers , Friends என்று பலபேர் இருக்காங்க . அதுல

யோகராஜ்ங்கிற நண்பர் இதுக்கெல்லாம் ஒரு பில்லர் மாதிரி பேர் சொல்ல முடியாத எத்தனையோ
பேர் என் பின்னாடி இருக்காங்க . எல்லார்க்கும் இந்த நேரத்துல Thanks சொல்லிக்கிறேன் .

SRBS Entertainment and preniss International Pvt Ltd ரெண்டும் சேர்ந்ததுதான் இந்த Deva 301 " Live
Show வை நடத்துகிறோம் . – Preniss International Pvt Ltd திரு . பிரேம்நாத் சிதம்பரம் சாருக்கும் ,
திரு . வெள்ளை சேது சார் அவர்களுக்கும் இந்த நேரத்துல நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் .
டிசம்பர் 21 – ம் தேதி பாண்டிச்சேரியில் நடத்தப்போற Deva 30 | Live Show – ல தேவாசார் Team
வோட , அனுரதா ஸ்ரீராம் , பிரசன்னான்னு ஏகப்பட்ட பிண்ணனி பாடகர் பாடகிகள் ,
இசைக்கலைஞர்கள் பங்கேற்கிற இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பு பெரும்ன்னு நான் உறுதி
சொல்லுவேன் . . என்று கூறினார் .

Preniss International Pvt Ltd திரு . பிரேம்நாத் சிதம்பரம் மற்றும் வெள்ளை சேது கூறுகையில்
எங்களின் Preniss கம்பெனி பல்வேறு துறைகளில் பல்வேறு நாடுகளில் சாதித்துக்
கொண்டிருக்கிறது . சினிமா , தொலைக்காட்சி , குறும்படங்கள் என மக்களின் பொழுதுபோக்கு
துறையிலும் Preniss கால்பதித்துள்ளது . குறிப்பாக Director திரு சேரன் அவர்களின் திருமணம்
திரைப்படம் எங்கள் நிறுவனம் தயாரித்ததுதான் . சாதிக்க வரும் இளைஞர்களுக்கு எங்கள்
நிறுவனம் என்றும் கைகொடுக்க தயாராக உள்ளது . இப்போது தேவா 30 1 * Live Show – வை SRBS
Entertainment வுடன் சேர்ந்து நடத்துகிறோம் . முதன் முதலில் பாண்டிச்சேரியில் ஆரம்பிக்கும்
எங்களின் Event இனி உலகெங்கும் நடத்த வழிவகுக்கும் பத்திரிக்கை , மீடியா , இணையதள
நண்பர்கள் , ரசிகர்கள் அனைவரும் எங்களின் முயற்சிக்கு ஆதரவு தருமாறு அன்போடு கேட்டுக்
கொள்கிறோம் என்று கூறினார்கள் .

Deva Sir Is Live Showவின் அறிமுக விழாவையே இவ்வளவு சிறப்பா நடத்துனத பார்க்கிறப்போ . . .
பாண்டிச்சேரியில Function பெரிய அளவுல சக்ஸஸ் ஆகும்ங்கிறதுல எந்த சந்தேகமும் கிடையாது .