ரஜினியின் ‘தர்பார்’ செகன்ட் லுக் போஸ்டர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் நயன்தாரா நடிப்பில் முருகதாஸ் இயக்கி வரும் படம் ‛தர்பார்’. அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இதன் சூட்டிங் தற்போது ஜெய்ப்பூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இன்று மலையாளிகளின் ஓணம் பண்டிகையான (செப்.,11) மாலை 6 மணிக்கு தர்பார் பட 2வது போஸ்டர் வெளியாகும் என அறிவித்து இருந்தனர். அதன்படி தற்போது தெறிக்க விடும் வகையில் செகன்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில் ரஜினிகாந்த் வெறும் பனியன் மட்டுமே அணிந்திருக்கிறார்.

ஆக்சன் காட்சியில் உள்ளதுபோல் ஆக்ரோஷமாக இருக்கிறார். தன் வலது கையில் காப்பு அணிந்திருக்கிறார். இதே போன்ற படம்… அதாவது 199ல் படையப்படா படத்தில் ரஜினிகாந்த் மேலாடையில் இல்லாமல் நடித்திருந்தார்.