“சின்ன பண்ணை பெரிய பண்ணை” திரைப்படத்தை மிக வேகமாக குறுகிய காலத்தில் படப்பிடிப்பை முடித்துள்ள S ஃபிலிம்ஸ்

S ஃபிலிம்ஸ் தயாரிப்பில் “சின்ன பண்ணை பெரிய பண்ணை” OTT யில் திரையிட அழைப்பு வந்தும் திரையரங்கில் முதல் படமாக வெளியாக இருக்கிறது.

இயக்குனர் பகவதி பாலா இயக்கத்தில், S ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள “சின்ன பண்ணை பெரிய பண்ணை” மக்களுக்கு நல்ல செய்தியை வழங்கும்.

நகைச்சுவை நடிகர் போண்டா மணி முதல் முறையாக கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் “சின்ன பண்ணை பெரிய பண்ணை” லாக் டவுன் முடிந்தவுடன் மிகக் குறுகிய காலத்தில் வேகமாக எடுத்து முடித்து இருக்கிறார் இயக்குனர் பகவதி பாலா. S ஃபிலிம்ஸ் சார்பாக தனசேகர் இப்படத்தை தயாரித்துள்ளார்.

“சின்ன பண்ணை பெரிய பண்ணை” படத்தின் படப்பிடிப்பு முடிந்து படத்தொகுப்பு ஆரம்ப விழா சென்னை, சாலிக்கிராமத்தில் அமைந்துள்ள சாய் ஸ்டுடியோவில் 17/09/2020 அன்று காலை 10 மணி முதல் துவங்கியது.

இப்படத்தில், ஆதேஷ் பாலா, இயக்குனர் பகவதி பாலா, ஷர்மிளா, பிரமோஸ் தாஸ், கண்ணாயிரம், கேபிள் சங்கர், செளந்தர் மேலும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு : AC அன்பு மாஸ் – முத்து. G
எடிட்டிங் : ராம்நாத் (சாய் ஸ்டுடியோ)
இணை இயக்கம் : அருங்கால் ரவி
உதவி இயக்குனர்கள் : ஆனந்தன் – யுவன் சதிஷ்
மக்கள் தொடர்பாளர் : மதிஒளி குமார்