கியூபாவில் சே குவேராவின் நினைவு தினம்  அனுசரிப்பு

புரட்சியாளரார் சே குவேரா, சுட்டுக்கொல்லப்பட்ட 50வது ஆண்டு நிறைவு தினம் கியூபாவில் அனுசரிக்கப்பட்டுள்ளது. சே குவேரா பொலிவியாவில் 1967ம் ஆண்டு இதே தினத்தில் பொலிவியா படையினரால் பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டார். அவரது உடல் கியூபாவுக்கு 1997ம் ஆண்டு கொண்டுவரப்பட்டு அங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளது. 
இந்நிலையில், கியூபப் புரட்சியில் முடிவைத் தந்த மோதல் ஒன்றில், கிளர்ச்சியாளர்களுக்கு சே குவேரா தலைமை தாங்கிய நகரான சாண்ட்டா கிளாராவில் சேகுவராவுக்கான அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.

இதன் போது சே குவேராவின் சிலை மற்றும் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்துக்கு அருகே ஆயிரக்கணக்கான மக்கள் கூடி அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்வில் கியூப அதிபர் ராவுல் காஸ்ட்ரோ, சேகுவராவின் கல்லறையில் ஒரு வெள்ளை ரோஜாவை வைத்து அஞ்சலி செலுத்தினார். இனம், மதம், நாடு கடந்து, ஒடுக்கப்படும் மக்களுக்காக போராடிய சேகுவரா புரட்சியின் நாயகனாக உலகில் நிலை பெற்றுள்ளார்.