சர்வதேச சுகாதார – தொழில்நுட்ப மாநாடு CAHOTECH 2019

சர்வதேச சுகாதார – தொழில்நுட்ப மாநாடு CAHOTECH 2019, ஐஐடி மெட்ராஸ் வளாகத்தில் 2019 செப்டம்பர் 27 – 28 தேதிகளில் நடைபெறுகிறது.

இரு நாட்கள் நடைபெறும் இந்த வருடாந்திர நிகழ்வில் நாடெங்கிலுமிருந்து 700-க்கும் அதிகமான உடல்நல பராமரிப்புத்துறை பணியாளர்களும், பிரதிநிதிகளும் கலந்து கொள்கின்றனர். 25-க்கும் மேற்பட்ட பிரபல ஆளுமைகள் இம்மாநாட்டில் உரையாற்றுகின்றனர்.

இரு நாட்கள் நடைபெறும் இம்மாநாடு, ஸ்டார்ட்அப் முனைவு நிறுவனங்களுக்கு நிதியுதவி, அடைகாப்பு, புதிய சுகாதார தொழில்நுட்ப தயாரிப்புகளுக்கான பீட்டா – பரிசோதனைகளுக்கான ஒரு தளத்தை மருத்துவமனைகளுடன் சேர்ந்து வழங்கும்.

சென்னை/செப்டம்பர் 12, 2019: அங்கீகாரம் பெற்ற உடல்நல பராமரிப்பு நிறுவனங்களது கூட்டமைப்பின் (CAHO) நான்காவது சர்வதேச சுகாதார – தொழில்நுட்ப மாநாடு, 2019 செப்டம்பர் 27-28 தேதிகளில் சென்னையிலுள்ள ஐஐடி மெட்ராஸ் ரீசர்ச் பார்க்கில் CAHOTECH 2019 என்ற பெயரில் நடைபெறவிருக்கிறது. இரு நாட்கள் நடைபெறுகின்ற இந்த வருடாந்திர நிகழ்வானது, சுகாதார – தொழில்நுட்ப துறை சார்ந்த மிகப்பெரிய நிகழ்வாக கருதப்படுகிறது. (இந்த நிகழ்வானது 2 நாட்கள் நடைபெற்றாலும் மாநாடானது, 2019 செப்டம்பர் 28 அன்று நடத்தப்படுகிறது).

உடல்நலப் பராமரிப்பு துறையோடு தொடர்புடைய சமீபத்திய தொழில்நுட்பம் மற்றும் தயாரிப்புகள் ஆகியவற்றில் தங்களது அறிவை நிகழ்நிலைப்படுத்திக் கொள்வதற்கு CAHOTECH 2019 மாநாட்டில் நாடு முழுவதிலுமிருந்து வருகை தரும் 700-க்கும் மேற்பட்ட உடல்நல பராமரிப்பு பணியாளர்கள் பங்கேற்க உள்ளனர். மருத்துவ – தொழில்நுட்ப தயாரிப்புகளின் விற்பனையானது செயல்முறைகள் மீதான புத்தாக்குனர்கள், தீர்வு வழங்குனர்கள் மற்றும் பராமரிப்பு தொழில்நுட்ப பிரிவில் நிதியுதவி வழங்கும் வாய்ப்புகளை தேடுகின்ற ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள், மருத்துவமனைகளில் முடிவுகளை தீர்மானிப்பவர்கள் மற்றும் புத்தாக்கமான மற்றும் நடப்பு நிலையை சீர்குலைக்கும் தொழில்நுட்பங்களை கண்டறிந்து, அதில் முதலீடு செய்பவர்கள் ஆகியோர் இவர்களுள் உள்ளடங்குவர். சுகாதார துறையில் நிதியுதவியை அல்லது பீட்டா பரிசோதனைக்கான தளத்தை எதிர்பார்க்கின்ற ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இந்நிகழ்வின் ஒரு அங்கமான பிட்ச்ஃபெஸ்ட் – ல் பங்கேற்க இலவசமாக பதிவு செய்துகொள்ளலாம்.

CAHOTECH 2019 – ன் அமைப்புக் குழு தலைவர் திரு. சமீர் மேத்தா, இது தொடர்பாக கூறியதாவது: “இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் நிகழ்வானது இதற்கு முன்பு நடைபெற்றதை விட இன்னும் மிகப்பெரிய அளவில் நிகழவிருக்கிறது. நமது உறுப்பினர் மருத்துவமனைகள் சிலவற்றில் ஏற்கனவே செயல்பாட்டில் இருந்து வருகின்ற தொழில்நுட்ப புத்தாக்கங்கள் குறித்து அனுபவங்களையும் மற்றும் முக்கியமான கற்றல்களையும் பகிர்ந்துகொள்வது இம்மாநாட்டின் ஒரு முக்கிய அம்சமாக இருக்கும். புதிதாக வந்திருக்கின்ற தொழில்நுட்பங்களை மதிப்பீடு செய்வது மற்றும் நம்பிக்கையளிக்கின்ற சிறப்பான ஸ்டார்ட்அப் நிறுவனங்களை காட்சிப்படுத்துவது ஆகியவையும் இந்நிகழ்வில் இடம்பெறும். தங்களது சமீபத்திய தொழில்நுட்பம் மற்றும் தயாரிப்புகளை காட்சிப்படுத்துகின்ற தனிப்பட்ட வழங்குனர்களின் வழியாக பிசினஸ் கலந்துரையாடல்களையும் CAHOTECH 2019 ஏதுவாக்கும். CAHO ஆல் ஏற்பாடு செய்யப்படுகின்ற இந்த சர்வதேச சுகாதார – தொழில்நுட்ப மாநாடானது, உடல்நல பராமரிப்பு சேவையை தொழில்நுட்பத்தோடு இணைக்கிறது. சுகாதாரம் மற்றும் தொழில்நுட்ப புத்தாக்கம், முதலீடு மற்றும் சிறந்த நடைமுறைகள் ஆகியவற்றிற்கு அதிக பயனளிக்கின்ற நிகழ்வாக இது நிச்சயம் இருக்கிறது. மருத்துவமனைகளில் அதிகபட்ச செயல்திறனை ஏதுவாக்குவதற்கு தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான சமீபத்திய தீர்வுகளை இது காட்சிப்படுத்துகிறது.” என்று கூறினார்.

இரு நாட்கள் நடைபெறுகின்ற CAHOTECH 2019 நிகழ்வில் 25 அமர்வுகளும், சிறப்புரைகளும் இடம்பெறுகின்றன. பல்வேறு துறைகளில் பிரபல ஆளுமைகளாக திகழும் 25-க்கும் அதிகமான பிரபலங்கள் இந்நிகழ்வில் சிறப்புரையாற்ற இருக்கின்றனர். இவர்களுள் சோம் மிட்டல் (நாஸ்காம் – ன் முன்னாள் பிரசிடெண்ட் & தலைவர்), டாக்டர். ககன்தீப் காங் (கிறித்தவ மருத்துவக் கல்லூரி), திரு. லட்சுமி நாராயணன் (காக்னிசண்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ்), திரு. ஜோஸ் ஃபோல்கர் (ஃபாக்ஸ்கான் இன்டர்நேஷனல் ஹோல்டிங்), திரு. அருண் ஜெயின் (நிறுவனர் – பொலாரிஸ்), டாக்டர் பாஸ்கர் ராமமூர்த்தி (இயக்குனர் – ஐஐடி மெட்ராஸ்): டாக்டர். யோன் கியூங் சோ (அல்சான் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அண்டு டெக்னாலஜி), டாக்டர். ஹுஸ்மாண்டு பழனி (ஏசியன் – பிசினஸ் அட்வைஸரி கவுன்சில்) ரவீந்திரன் பி (ஐஐடி மெட்ராஸ்), மற்றும் அனில் ரேலியா (இந்திய தரக் கவுன்சில்) ஆகியோர் இந்நிகழ்வில் உரையாற்றுபவர்களுள் சிலர். இந்நிகழ்வானது 28 தொழில்நுட்ப பார்ட்னர்களையும் மற்றும் 3 நாலெட்ஜ் பார்ட்னர்களையும் கொண்டிருக்கிறது.

CAHOTECH 2019 மாநாட்டின் அமைப்புச் செயலர் திரு. J. ஏடெல் இதுகுறித்து பேசுகையில், “தொழில்நுட்பமானது, மருத்துவசேவை வழங்குனர்களின் இயக்கதிறமை மற்றும் லாபமீட்டும் நிலையை அதிகரிப்பதில் மிக இன்றியமையா பங்கை ஆற்றுகிறது. தரமான உடல்நல சிகிச்சை பராமரிப்பினை பின்புலத்திலிருந்து இருந்து இயக்கும் சக்தியாக இது திகழ்கிறது; இதன்மூலம் சிகிச்சை வழங்குனர்களின் திறனை அதிகரிக்கவும் மற்றும் நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை பராமரிப்பு வழங்கப்படுவதை அதிகரிக்கவும் இது உதவுகிறது. மருத்துவ மற்றும் நோயாளிக்கான சிகிச்சையை மேம்படுத்துவதற்கும், நோயாளிகளுக்கு திறனதிகாரத்தை வழங்கச் செய்வதற்கும் செயல்முறை திறன் மற்றும் உகந்தவாறு சிறப்பான பயன்பாடு ஆகிய பகுதிகளில் தொழில்நுட்ப புத்தாக்கங்களின் பங்கு என்பது மீது CAHOTECH 2019 மாநாட்டின் சிறப்பு கவனம் இருக்கும். இந்த ஆண்டு சுகாதார – தொழில்நுட்ப ஸ்டார்ட்அப்ஸ் நிறுவனங்களையும் மற்றும் முதலீட்டாளர்களையும் ஒரே மேடைக்கு நாங்கள் ஒன்றாக கொண்டு வருகிறோம். ஆரம்ப நிலைகளிலேயே நல்ல தொழில்நுட்பத்தை கைவசப்படுத்தவும் மற்றும் தரம் மற்றும் வீச்செல்லையை அதிகரிக்கவும், புத்தாக்கமுனைவோர்களை திறனதிகாரம் பெறச்செய்வதே எமது நோக்கமாகும்,’ என்று குறிப்பிட்டார்.

CAHO அமைப்பின் தமிழ்நாடு பிரதிநிதியான திருமதி. பாரதி ரெட்டி பேசுகையில், “CAHOTECH ஒருங்கிணைத்து நடத்தும் சர்வதேச சுகாதார – தொழில்நுட்ப மாநாடானது, உடல்நல பராமரிப்பு நிறுவனங்களையும் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களையும் ஒரு கூரையின் கீழ், ஒருங்கமைக்கின்ற ஒரே செயல்தளமாக இருக்கிறது. உடல்நல பராமரிப்பு நிறுவனங்கள், அதிக திறன்மிக்க நடைமுறைகளை அறிந்து பின்பற்றவும் மற்றும் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும் மற்றும் பயன்படுத்தவும் இந்த நிகழ்வு அவர்களை ஏதுவாக்குகிறது. மருத்துவமனைகளுக்கு புத்தம் புதிய மற்றும் மிகச்சிறந்த தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதற்கு உதவுவதே இதன் நோக்கமாகும்,” என்று கூறினார்.

நிறுவனங்களில் சமபங்கு முதலீட்டாளர்கள் மற்றும் வென்ச்சர் முதலீட்டாளர்கள் கலந்துகொள்வது இந்நிகழ்ச்சியின் சிறப்பம்சம் ஆகும். சுகாதார – தொழில்நுட்ப செயல்தளத்தில் நிதியுதவி வாய்ப்புகளைத் தேடுகின்ற இம்மாநாட்டில் பங்கேற்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களை இவர்கள் மதிப்பீடு செய்வார்கள். இன்குபேஷன் மற்றும் புதிய புராடக்ட்களை பீட்டா பரிசோதனை செய்வதற்கு மருத்துவமனைகளுடன் ஈடுபடுவதற்குரிய வாய்ப்புகளையும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் இம்மாநாட்டில் கண்டறியும். நம்பிக்கை தரும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு நிதியுதவிக்காக மொத்தத்தில் ரூ.20 இலட்சம் என்ற நிதியத்தைக் கொண்டிருக்கின்ற ஒரு பிட்ச்ஃபெஸ்ட் நிகழ்வும் இதில் இடம்பெறுகிறது.

2019 செப்டம்பர் 15 ஆம் தேதி வரை http://cahotech.com என்ற இணையதளத்தில் அல்லது 98703 18781 / 98996 97587 என்ற எண்களை அழைப்பதன் வழியாக ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இலவசமாக முன்பதிவு செய்யலாம்.

CAHO குறித்து (www.caho.in )

அங்கீகரிக்கப்பட்ட சுகாதார பராமரிப்பு அமைப்புகள் கூட்டமைப்பு (CAHO) என்பது, அங்கீகாரம் பெற்ற மருத்துவமனைகள் மற்றும்பரிசோதனையகங்கள் மத்தியில் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் மற்றும் உடல்நல பராமரிப்பின் தரத்தை மேம்படுத்துவதற்காகமுயற்சிகளை முன்னெடுக்கவும் மற்றும் NABH மற்றும் NABL உடன் நெருக்கமாக செயலாற்றவும் குறிக்கோள் கொண்டுஇயங்குகிற ஒரு இலாப நோக்கற்ற சங்கமாகும். வளர்ந்து வருகின்ற எண்ணிக்கையில் NABH, NABL மற்றும் JCI அங்கீகாரங்களை பெறுகின்ற சுகாதார நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகள் இருக்கின்ற நிலையில் இந்த அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களுக்கு மத்தியில் தகவல் பரிமாற்றத்தை ஏதுவாக்குவதற்கும், சிறந்த நடைமுறைகளை பகிர்ந்து கொள்வதற்கும் மற்றும் தர அளவுகோள் நிலைகளை வழங்குவதற்கும், தரம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் ஒரு பொது செயல்தளத்திற்கான தேவை இருந்து வந்தது. இத்தேவையை பூர்த்தி செய்வதற்காகவே இலாபநோக்கற்ற ஒரு சங்கமாக, அங்கீகாரம் பெற்ற சுகாதார பராமரிப்பு நிறுவனங்களின் கூட்டமைப்பு (CAHO) என்ற பெயரில் உருவாக்கப்பட்டது. இந்நாட்டில் NABH மற்றும் NABL அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களுக்கு ஆதரவளிப்பதற்கு ஒரு சிறந்த தளத்தை CAHO வழங்குகிறது. அத்துடன், இத்தகைய அங்கீகாரங்களைப் பெறுவதற்காக மருத்துவமனைகள் மேற்கொள்ளும் பயணத்தில் இது அவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி வழிகாட்டுகிறது. மேலும், உடல்நல பராமரிப்பு சிகிச்சை வழங்கலில் பாதுகாப்பான நடைமுறைகளை செயல்படுத்துவது மீது விழிப்புணர்வையும் இது உருவாக்கி வருகிறது.