ஈகா எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் லிப்ட் படத்தில் நாயகனாக நடிக்கும் முதல்படம் லிப்ட்

0
ஒரு பாசிட்டிவான வார்த்தையில் டைட்டில் இருப்பது படத்திற்கே பாசிட்டிவாக இருக்கும். லிப்ட் என்ற டைட்டில்  அப்படியொரு பாசிட்டிவ் எனர்ஜியைக் கொண்டுள்ளது. ஈகா எண்டர்டெயின்மெண்ட் சார்பில் லிப்ட் படத்தை ஹேப்ஸி  தயாரிக்கிறார். படத்தின் கதையை வெகு வித்தியாசமாக எழுதி இயக்கி இருக்கிறார் வினித் வரபிரசாத். இவர் விளம்பரப் படங்கள் மூலம் பெரிதும் கவனம் பெற்றவர்.

பிக்பாஸ் மூலம் தமிழ்நாட்டின் செல்லப்பிள்ளையாக மாறிவிட்ட கவின் பிக்பாஸில் இருந்து வெளிவந்த உடன் நாயகனாக நடிக்கும் முதல்படம் இது.  கவின் ஜோடியாக  நடிகை அம்ரிதா ஐயர் நடிக்கிறார். மேலும் படத்தில் நடித்துள்ள மற்ற நடிக நடிகையர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியாக இருக்கிறது.

 படத்தின் பர்ஸ்ட் லுக் போலவே படத்தின் டெக்னிக்கல் டீமும் செம்மயாக இணைந்திருக்கிறார்கள்.

படத்தில் கேமராமேனாக S யுவா இணைந்துள்ளார். பாடல்களிலும் பின்னணி இசையிலும் மைக்கேல் பிரிட்டோ அசத்தி இருக்கிறார். இறுதிச்சுற்று படம் உள்பட பல்வேறு படங்களில் சண்டைக்காட்சிகளை அமைத்த  ஸ்டன்னர் சாம் இப்படத்தின் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியுள்ளார்.

படத்தின் ஜானர் திரில்லர் வகையைச் சார்ந்தது. படத்தின் கதை மீதும் படத்தில் பங்காற்றியவர்கள் மீதும் பெரிய நம்பிக்கை வைத்துள்ளதாகவும் அந்த நம்பிக்கைக்கு நற்சான்றாக  படம் உருவாகி இருப்பதாகவும் தயாரிப்பாளர் தரப்பில் சொல்லி இருக்கிறார்கள்

படப்பிடிப்பு முழுதும் நிறைவடைந்ததைத் தொடர்ந்து படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. தொடர்ந்து படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாக இருக்கிறது

 
Spread the love

Comments are closed.