நடுரோட்டில் சாவு கூத்தாடிய ஐட்டம் டான்ஸர்

தமிழ் சினிமா ஐட்டம் டான்ஸர்களில் முக்கியமானவர் ரிஷா. பல ஆண்டுகளாக பல படங்களில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டு வரும் ரிஷா, சில படங்களில் முக்கிய கதாபாத்திரமாக நடித்திருந்தாலும், அப்போதெல்லாம் பிரபலமாகாதவர், தற்போது ஒரு டான்ஸ் மூலம் தமிழகம் முழுவதும் பிரபலமாகி வருகிறார்.

அதுவும் அது சாதாரண டான்ஸ் அல்ல, சாவு டான்ஸ். ஆம், நடுரோட்டில் ஆண்களுக்கு இணையாக நடிகை ரிஷா சாவு டான்ஸ் ஆடியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதோடு, அந்த வீடியோவும் வைரலாகி வருகிறது.

பரிஷித்தா பிக்சர்ஸ் சார்பில் அரசர் ராஜா, தயாரித்து, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி ஹீரோவாக நடித்திருக்கும் படம் ‘பயங்கரமான ஆளு’. சித்தர்களையும், ஆன்மீகத்தையும் மையமாக வைத்து சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் ஹீரோ அரசர் ராஜா இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். ஒருவர்
சாவு டான்ஸ் ஆடுபவராகவும், மற்றொருவர் டிவி நிருபராகவும் நடித்திருக்கிறார். இவர்களில் சாவு டான்ஸ் ஆடுபவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் ரிஷா, ஹீரோவைப் போல சாவு டான்ஸ் ஆடும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

அந்த வகையில், பாடல் ஒன்றுக்கு ரிஷா நடுரோட்டில் சாவு கூத்து ஆடும் பாடல் ஒன்று சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

‘பயங்கரமான ஆளு’ வரும் டிசம்பர் 14 ஆம் தேதி வெளியாக உள்ளது.