பக்ரீத் திரைவிமர்சனம்

ஏழ்மையில் இருக்கும் விவசாயாக, வங்கியில் விவசாய கடன் வாங்க செல்கிறார் விக்ராந்த். நீங்கள் முதல் போட்டு முதலில் வேலையை தொடங்குங்கள் அதன் பின் லோன் வாங்கி தருகிறேன் என்று பேங்க் மேனேஜர் சொல்கிறார். பணத்திற்காக தன் நண்பனுக்கு தெரிந்த ஒரு இஸ்லாமியரை பார்க்க செல்கிறார்கள். அங்கு பக்ரீத் பண்டிகைக்காக ஒட்டகம் வருகிறது, பெரிய ஒட்டகத்துடன் அதன் குட்டி ஒட்டகமும் வருகிறது, அந்த சமயத்தில் குட்டி ஒட்டகத்தை பார்த்ததும் பாசம் வருகிறது விக்ராந்துக்கு. அந்த ஒட்டகத்தை நான் எடுத்துகிறேன் என்று சொல்லி தன் வீட்டுக்கு அழைத்து செல்கிறார்.

ஒட்டகத்திற்கு (சாரா) என பெயர் வீட்டில் ஒரு ஆளாக வளர்க்கிறார்கள். ஒட்டகத்திற்கு உடம்பு சரியில்லாமல் போகிறது. அதனால் ஒட்டகத்தை அதன் இடத்தில விட (ராஜஸ்தானில்) முடிவு செய்கிறார். இதனால் விக்ராந்த் என்ன மாதிரியான பிரச்சனைகளை சந்திக்கிறார். ஒட்டகம் (சாரா) விற்காக எவ்வளவு தூரம் பயணிக்கிறார் என்பதே பக்ரீத் படத்தோட மீதிக்கதை.

நலிந்த விவசாயாக நடிகர் விக்ராந்த் (ரத்தினம்) சிறப்பாக நடித்துள்ளார். 7 வருடங்களுக்கு பிறகு கிடைக்கும் சொத்தாக இருந்தாலும் அதில் விவசாயம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் சிறப்பு. விக்ராந்துக்கு மனைவியாக நடித்துள்ள வசுந்தரா சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார். இவர்களுக்கு மகளாக நடித்துள்ள குட்டி பெண்ணின் நடிப்பும் அருமை. அதுமட்டுமில்லாமல் படத்தில் நடித்த எல்லோரும் அவர்களுடைய சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளனர்.

படத்தில் சில வசனங்கள் மனதில் தாக்கத்தை எற்படுத்தியுள்ளது. கடன் கேட்கும் இடத்தில், நாங்க பக்ரித்க்கு பிரியாணி போட்ட 1000 பேரு சாப்பிடுவாங்க. ஆனா, நீங்க விவசாயம் செய்தால் பல ஆயிரம் பேருக்கு சோறு போடுவிங்க என்பதும், விவசாயத்தை அடுத்த தலைமுறை பார்க்கவா போகிறார்கள் என்பதும், நம்மை யோசிக்க வைக்கிறது.

D இமான் இசையில் நம்மை பிரமிக்க வைக்கிறார். பிண்ணனி இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் என அனைத்தும் அருமை.

மொத்தத்தில் வளர்ப்பு பிராணிகள் பிடித்தவர்களுக்கு மட்டுமில்லாமல் அனைவர்க்கும் பிடிக்கும் படம் பக்ரீத்