அமெரிக்காவில் புலிக்கு வைரஸ்

அமெரிக்காவின் நியூயார்க் சிட்டியில் அமைந்துள்ள புரேன்ஸ் உயிரியல் பூங்காவில் பரமாரிக்கப்பட்டு வரும் பெண் புலி ஒன்றுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உயிரியல் பூங்காவில் பணியாற்றி வந்த நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. எனவே, அந்த நபர் மூலமாக புலிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

அது மட்டுமில்லாமல் மேலும், சில புலிகளுக்கு வறட்டு இருமல் போன்ற அறிகுறிகள் தென்படுவதாக உயிரியல் பூங்கா நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. புலிகள் மற்றும் சிங்கங்களிடம் வைரஸ் எவ்வாறு இருக்கும் என்று தெரியவில்லை. எனினும், பூங்காவில் உள்ள அனைத்து விலங்குகளையும் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம் என்று பூங்கா நிர்வாகம் கூறியுள்ளது.

மனிதர்களுக்கு மட்டுமே பரவி வந்த கொரானா திடீரென விலங்குகளுக்கும் பரவி உள்ளதால் அமெரிக்கா நிலைகுலைந்து அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளது.