‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் புதிய சாதனை

 
‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் டுவிட்டரில் அதிக ரீவிட்டுகளை பெற்று புதிய சாதனை ஒன்றை படைத்திருக்கிறது. இதற்கு முன்னதாக விஜய்யின் `மெர்சல்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் முதல்முறையாக நேற்று 50 ஆயிரம் ரீடுவிட்டுகளை பெற்றிருந்தது. 

`மெர்சல்’ படம் படைத்த இந்த சாதனையை சூர்யா ரசிகர்கள் சில மணிநேரங்களிலேயே தகர்த்துவிட்டனர். தமிழ் சினிமாவில் அதிவிரைவில் 50 ஆயிரத்திற்கும் மேல் ரீடுவிட் செய்யப்பட்ட பர்ஸ்ட் லுக் போஸ்டரும் இதுதான். தற்போது வரை சுமார் 62 ஆயிரம் ரீடுவிட்டுகளையும், 77 ஆயிரம் லைக்குகளையும் `தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.  இந்நிலையில், “நானா தான வீணா போன” என்ற வரிகளில் தொடங்கும் இப்படத்தின் சிங்கிள் டிராக் ஒன்று நாளை வெளியாக இருக்கிறது. 

ஸ்டூடியோ கிரீன் மற்றும் சூர்யாவின் 2டி என்டர்டெயின்ட்மண்ட் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் கார்த்திக், செந்தில், சரண்யா பொன்வண்ணன், நந்தா, ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சத்யன், கோவை சரளா, ஆனந்தராஜ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.