8 பேர் குற்றவாளிகள் என்று சங்கர் கொலை வழக்கில் தீர்ப்பு

சங்கர் ஆணவ படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கவுசல்யாவின் தந்தை உட்பட 8 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டது. 3 பேர் விடுதலை செய்யப்பட்டனர். திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள குமரலிங்கத்தை சேர்ந்தவர் சங்கர். இவர், பழநியை சேர்ந்த கவுசல்யா என்பவரை காதலித்து ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டார். பின்னர் கடந்த 2016 மார்ச் 13இல் உடுமலையில், கவுசல்யாவின் உறவினர்கள் சங்கரை சராமரியாக வெட்டி கொன்றனர். கவுசல்யா படுகாயமடைந்து சிகிச்சை பெற்றார். இது குறித்து போலீசார், கொலை, வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி, தாய் அன்னலட்சுமி, மாமா பாண்டித்துரை, மணிகண்டன், மைக்கேல், செல்வக்குமார், ஜெகதீசன், தன்ராஜ், தமிழ் கலைவாணன், பிரசன்னா, மணிகண்டன் ஆகியோர் கைது செய்ய பட்டனர்.

இதனை தொடர்ந்து இது தொடர்பான வழக்கு இன்று தீர்ப்பிற்காக நீதிமன்றத்திற்கு வந்தது. அப்போது, கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி உள்ளிட்ட8 பேரும் குற்றவாளிகள் எனவும், தாயார் அன்னலட்சுமி, தாய்மாமன் பாண்டித்துரை மற்றும் பிரசன்னா ஆகியோரை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கினார். அவர்களுக்கான தண்டனை குறித்த வாதம் நடந்து வருகிறது.தங்களுக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என குற்றவாளிகள் தரப்பில் கேட்கப்பட்டுள்ளது. இதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால், தண்டனையை குறைத்து வழங்க முடியாது என நீதிபதி அறிவித்துள்ளார்.