5 ஆண்டுகளாக செயல்படமால் இருக்கும் நகராட்சி படிபகத்தினை திறக்க கோரிக நகராட்சி அலுவலகம் முற்றுக்கை

கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட 14 வது வார்டு ஆழ்வார் தெருவில் அமைந்திருக்கும் நகராட்சி படிப்பகம் சுமார் 20 வருடத்திற்கு மேல் செயல்பட்டு வந்தது. இந்த படிப்பகத்தில் பெரியவர் முதல் சிறியவர் வரை தினசரி செய்திதாள் படித்து செல்ல உபயோகமாக இருந்து வந்தது. இந்த நிலையில் பழுதடைந்த படிப்பகத்தினை கடந்த 2013ம் ஆண்டு நகராட்சி நிர்வாகம் ரூ.1லட்சம் செலவில் புதுப்பிக்கும் பணிகளை மேற்கொண்டது. பணிகள் முடிந்து 5 ஆண்டுகளுக்கு மேலாகியும் தற்போது வரை அந்த படிப்பகம் திறக்கப்படமால் உள்ளது.

இதனால் இப்பகுதி மக்கள் மட்டுமின்றி, இதனை பயன்படுத்தி வந்த பள்ளி,கல்லூரி மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தும் படிப்பகம் திறக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நற்பணி இயக்க நண்பர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் தேமுதிக நிர்வாகி பாலமுருகன் தலைமையில் நகராட்சி அலுவலகத்தினை முற்றுக்கையிட்டு படிப்பகத்தினை உடனடியாக திறக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் நகராட்சி ஆணையர் அச்சையாவிடம் கோரிக்கை மனுவும் அளித்தனர், மனுவினை பெற்றுக்கொண்ட ஆணையர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.