234 பேர் பலி: சர்வதேச செஞ்சிலுவை சங்கம் ஏமன் கலவரத்தில்

 

ஏமனில் தலைநகரம்  சானாவில் கடந்த ஒரு வாரமாக அரசுப் படைகள்,  ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. இதில் 234 பேர் பலியாகினர். 400 பேர் காயமடைந்தனர். செஞ்சிலுவை அமைப்பைச் சேர்ந்த குழுக்கள் காயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவிகள் செய்து வருகின்றன என்று கூறப்பட்டுள்ளது. ஏமனின் அதிபராக 22 ஆண்டுகள் பதவி வகித்த அலி அப்துல்லா சலே கடந்த திஙக்ட்கிழமை ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார்.தலைநகர் சனாவில் அரசுக்கு எதிராக ஹவுத்தி படையினர் நடத்திய தாக்குதலில் அலி அப்துல்லா சலே கொல்லப்பட்டார்.இந்த நிலையில் அலி அப்துல்லாவின் ஆதரவாளர்கள் தங்களது தலைவரைக் கொன்றவர்களைப் பழிவாங்குவோம் என்று சூளுரை எடுத்துள்ளனர்.ஏமன் அரசுக்கு ஆதரவாக ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு அளித்து வந்த அப்துல்லா, சமீபத்தில் சவுதி கூட்டுப் படைக்கு ஆதரவு அளிக்கப் போவதாக தெரிவித்தார். இந்த நிலையில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் அப்துல்லா கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.