12 வருடம் போராடினேன் – பிரேம்

இதுவரை 5க்கும் மேற்பட்ட படங்களில் போலீஸ் வேடத்தில் நடித்து விட்டேன். ‘விக்ரம் வேதா’ எனது 27-வது படம். இந்த படத்திலும் போலீஸ் வேடம் என்று இயக்குனர் ‌ஷங்கர் காயத்ரி சொன்னதால் முதலில் மறுத்தேன்.  பின்னர் யூனிபாம் போடாத போலீஸ் என்றதால் அரை குறை மனதுடன் கதைகேட்டேன்.

அப்போது அந்த சைமன் வேடத் தின் முக்கியத்துவம் தெரிந்தது. உடனே ஒப்புக் கொண்டேன். இந்த படத்துக்காக எனது ‘கெட்-அப்’பை ‘சத்யா’ கமல் போன்று இயக்குனர் மாற்றினார். கமலின் தீவிர ரசிகனான நான் அவரது கெட்டப்பில் நடித்ததும், அதற்கு பாராட்டுகள் குவிவதும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த அங்கீகாரம் கிடைக்க 12 வருடம் போராடி இருக்கிறேன்.

‘விக்ரம் வேதா’ எனக்குபுதிய அடையாளத்தை கொடுத்திருக்கிறது. வெளியில்போகும் போது ரசிகர்கள் என்னை அடையாளம் கண்டு பிடித்து, ‘சைமன்டா’ என்று சூழ்ந்து கொள்வது எனக்கு பெருமையாக இருக்கிறது. பன் மடங்கு ஆனந்தத்தை கொடுக்கிறது. தற்போது சசிகுமாரின் ‘கொடிவீரன்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறேன். இனி நடிக்கும் படங்களில் எனக்குரிய பாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பேன்”.