12 பேர் நியமனம் அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர்களாக

அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர்களாக 12 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் தலைமையில் எம்.எல்.ஏக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அவர், “சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்க வேண்டும். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடக்கும். சட்டப்பேரவையில் ஜனநாயக மரபுகள் காக்கப்பட வேண்டும் என முதல்வர் எம்.எல்.ஏக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.  சட்டப்பேரவைக்கு தினகரன் வருவதால் அ.தி.மு.கவிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. சட்டப்பேரவையில் தினகரன் பேசினால் அதை அ.தி.மு.கவினர் பொருட்படுத்த வேண்டாம். எதிர்கட்சியினரின் கேள்விகளுக்கு அந்தந்த துறை அமைச்சர்கள் பதில் அளிப்பர். சட்டப்பேரவையில் அமைதி காக்கப்பட வேண்டும். இன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் 104 எம்.எல்.ஏக்கள் பங்கேற்றனர்.  கூட்டத்தில் பங்கேற்க இயலாத எம்.எல்.ஏக்கள் வர இயலாதது குறித்து கடிதம் அளித்துள்ளனர்” என தெரிவித்தார்.இதனையடுத்து அதிமுக செய்தித் தொடர்பாளர்களாக 12 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வ அறிக்கை வெளியானது.அவர்களின் விபரம் பின்வறுமாறு: பொன்னையன்,,சமரசம், மருது அழகுராஜ், ஜே.சி.டி. பிரபாகர், கே.சி.பழனிசாமி, கோவை செல்வராஜ், வைகைச்செல்வன், வளர்மதி, கோகுல இந்திரா, பேராசிரியர் தீரன், பாபு முருகவேல் ஏ.எஸ். மகேஸ்வரி ஆகியோர் ஆவர். இந்த 12 பேரைத்தவிர வேறு யாரும் ஊடகங்களுக்கு விளக்கமளிக்க கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.