எஸ்ஆர்எம் கல்வி குழும வேந்தர் டாக்டர் டி.ஆர். பாரிவேந்தர் எம்பி பிறந்த நாள் விழா

எஸ்ஆர்எம் கல்வி குழும வேந்தர் டாக்டர் டி.ஆர். பாரிவேந்தர் எம்பி பிறந்த நாள் விழா – பெரம்பலூர் அரசு பள்ளிகளுக்கு100 கணினி உள்ளிட்ட பல்வேறு நல உதவிகள் வழங்கப்பட்டன.

எஸ்ஆர்எம் கல்வி குழும வேந்தர் டாக்டர் டி.ஆர். பாரிவேந்தரின் பிறந்த நாள் விழா சேவை திருநாளாக நடத்தப்பட்டது.இதில் 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை டாக்டர் பாரிவேந்தர் தொடங்கி வைத்து பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அரசு பள்ளிகளுக்கு100 கணினிகள் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் உள்ளிட்ட நல உதவிகள் ஆகியவற்றை வழங்கினார்.

நிகழ்ச்சியில் எஸ்ஆர்எம் பணியாளர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தினை வேந்தர் தொடங்கி வைத்தார்.

எஸ்ஆர்எம் கல்வி குழுமத்தின் வேந்தரும் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி எம்பியுமான டாக்டர் பாரிவேந்தரின் பிறந்த நாள் விழா எஸ்ஆர்எம் 

அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் தமிழ்ப் பேராயத்தின் சார்பில் சேவை நாளாக நடத்தப்பட்டது.நிறுவனத்தின் வளாகத்தில் உள்ள டி.பி.கணேசன் அரங்கில் நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு நிறுவனத்தின் இணை துணைவேந்தரும் தமிழ்ப் பேராயத்தின் தலைவருமான முனைவர் ஆர்.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். இணை துணைவேந்தர் முனைவர் டி.பி.கணேசன், பதிவாளர் என்.சேதுராமன், அண்டு டி இயக்குனர் முனைவர் சி.முத்துசெல்வன், நிதி இயக்குனர் எம்.பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குனர் கவிஞர் லிங்குசாமி இந்திய ஜனநாயக கட்சியின் பொது செயலாளர் ஜெயசீலன் உள்ளிட்ட பலர் வேந்தர் டாக்டர் பாரிவேந்தரை வாழ்த்தி பேசினர்.

நிகழ்ச்சியை யொட்டி கவிஞர் அறிவுமதி தலைமையில் மக்கள் பணியில் வேந்தர் என்ற தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது. இதில் கல்வி என்ற தலைப்பில் கலைமாமணி ஆண்டாள் பிரியதர்ஷினி,சமூக நலன் தலைப்பில் கவிஞர் இசாக், கொடை தலைப்பில் கவிஞர் அருண்பாரதி ஆகியோர் வேந்தரை பாராட்டி கவி பாடினார்கள்

தனது பிறந்த நாளை யொட்டி 1 லட்சம் மரக்கன்றுகள்  நடும் திட்டத்தினை டாக்டர் பாரிவேந்தர் தொடங்கி வைத்ததுடன் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள அரசு பள்ளிகளுக்கு100 கணினி, பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கியதுடன் எஸ்ஆர்எம் கல்வி நிறுவன ஊழியர்களுக்கான ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் ஏற்புறைக்கு நன்றி தெரிவித்து  டாக்டர் டி. ஆர்.பாரிவேந்தர் பேசியதாவது: 10 ஆண்டுகளுக்கும் முன்பு  வரை நான் பிறந்த நாளை நினைத்து பார்த்ததில்லை. நான் அரசியல் இயக்கம் தொடங்கி அரசியல் வாதியாக மாறிய பின் கட்சியின் தொண்டர்கள் நிர்வாகிகள் என் பிறந்த நாளை கொண்டாடுகின்றனர். என் பிறந்த நாளை மக்களுக்கு பயன்படும் வகையில் அமைய வேண்டும் என்பதற்காக பள்ளிகளில் வளர்ச்சிக்கான நல உதவி திட்டங்களை வழங்கி உள்ளேன் என்றார்.எஸ்ஆர்எம் ஊழியர்கள் நலனுக்காக ஓய்வூதிய திட்டம்  கொண்டு வரப்பட்டுள்ளது என்றார்.