வெளிநாடுகளில் அசத்தும் விஜய்யின் ‘தெறி’ பட வசூல்!

theri vijay

 

அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, ஏமி ஜாக்சன், நைனிகா (மீனாவின் மகள்), பிரபு, இயக்குநர் மகேந்திரன், ராதிகா போன்றோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் தெறி. இந்தப் படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.சென்ற வாரம் வெளியான இந்தப் படம், வியாபார ஒப்பந்தத்தில் உண்டான சிக்கல்கள் காரணமாக செங்கல்பட்டுப் பகுதிகளில் சில திரையரங்குகளில் மட்டும் வெளியாகவில்லை. மற்றபடி உலகெங்கும் வெளியாகி வசூலில் நாளுக்கு நாள் முன்னேற்றம் கண்டு வருகிறது.செங்கல்பட்டுப் பகுதிகளில் வெளியாகாததால் சென்னைத் திரையரங்குகளுக்கு அதிக வசூல் கிடைத்தன. இதன்படி முதல் நான்கு நாள்களில் சென்னையில் மட்டும் ரூ. 4 கோடி வரை வசூல் கிடைத்துள்ளது.வெளிநாடுகளிலும் தெறி படத்தின் வசூல் அதிக கவனம் பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவில் முதல் நான்கு நாள்களில் மட்டும் ரூ. 1.30 கோடி வசூலாகியுள்ளது. அதேபோல இங்கிலாந்திலும் இந்த நான்கு நாள்களில் ரூ. 2 கோடி வரை வசூல் கிடைத்துள்ளது.வட அமெரிக்காவில் மட்டும் சனிக்கிழமை வரை ரூ. 5.40 கோடி வசூலை அள்ளியுள்ளது. இதற்கு முன்பு இதுபோன்ற வெளிநாட்டுப் பகுதிகளில் ஹிந்திப் படங்களுக்கு பஞ்சாபி படங்கள்தான் அதிக போட்டி அளிக்கும். இப்போது தெறி படம் அந்த இடத்தைப் பிடித்துள்ளது என்று சினிமா நிபுணர்கள் கூறியுள்ளார்கள்.