பத்மவிருதுகள்

images

ரஜினிகாந்த் உள்ளிட்டவர்களுக்கு  பத்மவிருதுகள்

ரஜினிகாந்த் உள்ளிட்டவர்களுக்கு பத்ம விபூஷன் விருதுகளும், பத்ம பூஷன் விருதுகள் டென்னிஸ் வீராங்கனை சானிய மிர்சா உள்ளிட்டவர்களுக்கும் மற்றும் பத்ம ஸ்ரீ விருதுகள் பிரியங்கா சோப்ரா உள்ளிட்டவர்களுக்கும் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார்.
2016ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் குடியரசு தினத்தன்று அறிவிக்கப்பட்டது. இதில் 10 பத்ம விபூஷன் விருதுகள், 19 பத்ம பூஷன் விருதுகள் மற்றும் 83 பத்ம விருதுகள் மொத்தம் 112 விருதுகள் அறிவிக்கப்பட்டது.முதலில் கடந்த மாதம் 28ஆம் தேதி நடைபெற்ற விழாவில் 56 பேருக்கு குடியரசுத்தலைவர் மாளிகையில் பத்ம விருதுகளை குடியரசுத்தலைவர் வழங்கினார்.இதை தொடர்ந்து நடைபெற்ற விழாவில் தமிழ் நடிகர் ரஜினிகாந்த், நடிகை பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட 56 பேருக்கு பத்ம விருதுகளை குடியரசுத்தலைவர் வழங்கினார்