தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தென் மாவட்டங்களில்  ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம், ‘‘தென் மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்துள்ளது. இது, நாளை(நவம்பர் 30) கன்னியாகுமரி அருகே மையம் கொண்டிருக்கும். இதனால் அடுத்த 24 மணிநேரத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும். ஒரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்’’ எனத் தெரிவித்துள்ளது.