சண்டை ஆக்க்ஷன் காட்சிகளில் களமிறங்கும் தமன்னா

தமன்னா தமிழை தவிர தெலுங்கு, கன்னடம், இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது இவர் விக்ரமிற்கு ஜோடியாக ‘ஸ்கெட்ச்’ படத்தில் நடித்து வருகிறார். மேலும் ‘குயின்’ இந்தி ரீமேக் படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து இந்தியில் ஜான் ஆபிரகாம் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக ஒரு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் தமன்னா. படத்தை மிலாப் ஜவோரி இயக்குகிறார். சஸ்பென்ஸ் திரில்லர் கதையில் உருவாகும் இந்த படத்தில் மனோஜ் பாஜ்பாய் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படத்தில் நடிகை தமன்னாவுக்கு அடிதடி சில சண்டை காட்சிகளும் இடம் பெற்றுள்ளதாம். இதன் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.