சட்டப்பேரவை தேர்தல் விறுவிறுப்பு அதிகரிப்பு எந்தெந்த தொகுதிகளில் யார் யாருடன் மோதல்?

TN ELECTIONஅதிமுக மற்றும் திமுக கூட்டணியுடன் தேமுதிக ம.ந.கூட்டணி தமாகா அணி பெருவாரிய இடங்களில் மோதுகின்றன. தேமுதிக – ம.ந.கூட்டணி தமாகா அணியில், தேமுதிக திமுகவை எதிர்த்து 74 இடங்களிலும், மதிமுக 24 இடங்களிலும், விசிக 22 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் 21 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 19 இடங்களிலும், தமாகா 14 இடங்களிலும் என திமுக போட்டியிடும் 174 இடங்களில் போட்டியிடுகின்றன.இதே போல், காங்கிரஸ் கட்சியை எதிர்த்து தேமுதிக 18 இடங்களிலும், தமாகா 9 இடங்களிலும், மதிமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலா 5 இடங்களிலும், விசிக 3 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் 1 இடத்திலும் எதிர்த்து போட்டியிடுகின்றன.திமுக அணியில் புதிய தமிழகம் போட்டியிடவுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர், வாசுதேவநல்லூர் ஆகிய 2 தனி தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிடவுள்ளது. புதிய தமிழகத்தின் கிருஷ்ணராயபுரத்தில் தமாகாவும், ஓட்டப்பிடாரத்தில் தேமுதிகவும் போட்டியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது.திமுக அணியில் உள்ள இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கான வானியம்பாடி, பூம்புகார் தொகுதியில் தமாகாவும், மணப்பாறை, கடையநல்லூர், விழுப்புரம் தொகுதியில்தேமுதிகவும் போட்டியிடவுள்ளன.கடையநல்லூரில் அதிமுக அணியில் உள்ள தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சியும் போட்டியிடுகிறது. பெருந்தலைவர் மக்கள் கட்சி போட்டியிடவுள்ள பெரம்பூர் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது.திமுக அணியிலுள்ள சமூக சமத்துவப் படையை தேமுதிக பெரம்பலூரில் எதிர்க்கிறது. திமுக அணியில் உள்ள மனித நேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொண்டாமுத்தூர், ஆம்பூர் தொகுதி யில் தேமுதிகவும், நாகப்பட்டினத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிடுகின்றன. அதிமுக அணியில் மனிதநேய ஜனநாயகக் கட்சி போட்டி யிடவுள்ள நாகப்பட்டினம் மற்றும் ஒட்டன்சத்திரம் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது.மேலும், மதுராந்தகத்தில் திமுகவுட னும், அதிமுக அணியில் உள்ள இந்திய குடியரசுக் கட்சியுடனும் தேமுதிக மோதுகிறது. திருச்செந்தூரில் அதிமுக அணியில் சமக வேட்பாளராகவுள்ள சரத்குமார் மற்றும் திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணனை எதிர்த்து தேமுதிக களம் காணவுள்ளது. திருவாடனையில் திமுக சார்பில் சுப.தங்கவேலனின் மகன் சுப.திவாகரன் மற்றும் அதிமுக அணியின் நடிகர் கருணாஸை எதிர்த்து தேமுதிக போட்டியிடுகிறது.தமிழகத்தின் 3 பெரிய கட்சிகளான அதிமுக திமுக தேமுதிக இடையே 70 தொகுதிகளில் நேரடி போட்டி உருவாகியுள்ளது. அதன் விவரம் வருமாறு, திருவொற்றியூர், கொளத்தூர், வில்லிவாக்கம், எழும்பூர்(தனி), சேப்பாக்கம் திருவல் லிக்கேணி, விருகம்பாக்கம், தியாகராய நகர், வேளச்சேரி, ஆலந்தூர், தாம்பரம், செங்கல்பட்டு, உத்திரமேரூர், காஞ்சி புரம், இராணிப்பேட்டை, கே.வி.குப்பம், ஜோலார்ப்பேட்டை, திருப்பத்தூர், வேப் பன்னஹல்லி, பாலக்கோடு, தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, செங்கம், திருவண் ணாமலை, ஆரணி, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, உளுந்தூர் பேட்டை, உடுமலைப்பேட்டை, நிலக் கோட்டை, நத்தம், குளித்தலை, திருச்சி மேற்கு, திருவெறும்பூர், மண்ணச்சநல்லூர், அரியலூர், திட்டக்குடி, விருத்தாச்சலம், குறிஞ்சிப்பாடி, சீர்காழி தனி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சா வூர், ஆலங்குளம், திருநெல்வேலி, ராதாபுரம், கன்னியாகுமரி, பத்ம நாபபுரம் உள்ளிட்ட 70 தொகுதிகளில் திமுக – அதிமுக – தேமுதிக இடையே நேரடியாக போட்டி நிலவுகிறது.

 

திமுக அணியில் மக்கள் தேமுதிக வின் ஈரோடு கிழக்கு, மேட்டூர், கும்மிடிப்பூண்டி, சமூக சமுத்துவப் படையின் பெரம்பலூர், தமிழ்நாடு விவசாய தொழிலாளர் கட்சியின் பண்ருட்டி ஆகிய 5 இடங்களில் அந்தக் கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவுள்ளன. இதேபோல், அதிமுக அணியில் இந்திய குடியரசுக் கட்சியின் மதுராந்தகம் தொகுதி, முக்குலத்தோர் புலிப்படை கருணாஸின் திருவாடானை தொகுதி, சமகவுக்கான திருச்செந்தூர் தொகுதி ஆகிய 3 இடங்களில் அக்கட்சி வேட்பாளர்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டி யிடவுள்ளனர். இந்த வகையில், இந்த 8 இடங்களையும் சேர்த்து, தேமுதிக தான் போட்டியிடவுள்ள 104 தொகுதிகளில், 78 இடங்களில் திமுக அதிமுகவுடன் நேரடியாக மோதுகிறது.