சசிகுமாரின் ‘வெற்றிவேல்’ ஏப்ரல் 22 –ல் வெளியாகிறது

SASIKUMARசசிகுமார், மியா ஜார்ஜ், பிரபு நடிப்பில் வசந்தமணி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வெற்றிவேல். ஒளிப்பதிவு – கதிர். இசை – இமான். இந்தப் படத்தின் பாடல்களும் டிரெயிலரும் சமீபத்தில் வெளியிடப்பட்டன.வெற்றிவேல் படம் ஏப்ரல் 29 அன்று வெளியாவதாக இருந்தது. ஆனால் படத்தை வெளியிடும் லைகா நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி வெற்றிவேல படம் 22-ம் தேதி வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்குத் தணிக்கையில் யூ சான்றிதழ் கிடைத்துள்ளது.