கபாலி படத்துக்கான ஒலிப்பதிவு தொடக்கம் – ரஜினி பங்கேற்பு

rajni dubbingரஜினி நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புடன் உருவாகி வரும் புதிய படம் ‘கபாலி’. இப்படத்தை அட்டக்கத்தி ரஞ்சித் இயக்கி வருகிறார். ரஜினியுடன் ராதிகா ஆப்தே, தன்ஷிகா, அட்டக்கத்தி தினேஷ், கலையரசன், ரித்விகா உள்ளிட்டோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. சென்னை மற்றும் மலேசியா, தாய்லாந்து ஆகிய வெளிநாடுகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டப்பிங் பணியை நேற்று ரஜினி தொடங்கியுள்ளார். கடந்த சில நாட்களாக ‘2.0’ படப்பிடிப்பில் பிசியாக இருந்த ரஜினி, தற்போது அந்த படத்திற்கு சிறு ஓய்வு கொடுத்துவிட்டு, கபாலி டப்பிங் பணியை மேற்கொள்ளவிருக்கிறார்கள்.