கடலில் தத்தளித்த தமிழக மீனவர்கள் 3 பேர் மீட்பு

vtv_logo_footerமீன்பிடிப் படகின் என்ஜின் பழுதாகி நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த கடலூரைச் சேர்ந்த 3 மீனவர்களை புதுச்சேரி கடலோர பாதுகாப்பு போலீஸார் திங்கள்கிழமை பாதுகாப்பாக மீட்டனர்.கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை சுமார் 3 மணியளவில் ஃபைபர் படகு மூலம் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். கடற்கரையில் இருந்து சுமார் 12 நாடிக்கல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது படகின் என்ஜின் திடீரென பழுதடைந்துள்ளது. இதனால் 3 பேராலும் கரைக்கு திரும்ப முடியவில்லை.மேலும் அருகில் மற்ற மீனவர்கள் யாரும் இல்லை. இதனால் நடுக்கடலில் படகு தத்தளித்துள்ளது. இரவு முழுவதும் அவர்களது படகு கடலில் தத்தளித்தவாறே இருந்துள்ளது. இந்த நிலையில் காற்று மற்றும் அலையின் காரணமாக படகு புதுச்சேரி கடற்கரையில் இருந்து சுமார் 5.5 நாடிக்கல் மைல் தொலைவுக்கு வந்துவிட்டது. இதனால் செல்லிடப்பேசி சிக்னல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அவர்கள் அவசர உதவி எண்ணில் தகவல் அளித்ததன்பேரில் கடலோர பாதுகாப்பு போலீஸார் படகில் சென்று, மீனவர்களை பத்திரமாக மீட்டனர்.