அப்போலோ நிர்வாகத்துக்கு கால அவகாசம் ஜெ.மரண விசாரணை.

நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் இறுதியில் அப்போலோ நிறுவனத்தலைவர் பிரதாப் ரெட்டி மற்றும் ப்ரீத்தா ரெட்டிக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி ஜனவரி 5ம் தேதிக்குள் அப்போலோவில் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அப்போலோ நிறுவன வழக்கறிஞர் மஹிபுனா பாட்ஷா, ஆவணங்களை சமர்ப்பிக்க கால அவகாசம் வேண்டும் என ஆணையத்திடம் கோரிக்கை விடுத்தார். அதன்படி ஜனவரி 12ம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், குடும்ப மருத்துவர் சிவக்குமார் இருவரும் அடுத்த வாரம் நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்ப ஆணையம் திட்டமிட்டுள்ளது.