அரசியல் கட்சிகள் மே 14 முதல் தொலைக்காட்சியில் பிரசாரம் செய்யக் கூடாது: ராஜேஷ் லக்கானி பேட்டி

rajeshவரும் மே மாதம் 14 முதல் 16-ஆம் தேதி வரை அரசியல் கட்சிகள், தொலைக்காட்சியில் பிரசாரம் செய்யக் கூடாது என தமிழக தலைமை தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார்.மேலும் இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:வேட்பாளர்களின் செலவினங்களை பார்வையிட 12 பேர் கொண்ட மத்திய குழு நாளை தமிழகம் வருகிறது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் அனைத்து அசையும், அசையா சொத்து விவரங்கள் வருமான வரித்துறைக்கு அனுப்பப்படும்.வரும் மே மாதம் 14 முதல் 16-ஆம் தேதி வரை அரசியல் கட்சிகள், தொலைக்காட்சியில் பிரசாரம் செய்யக் கூடாது. மே மாதம் 14-ஆம் தேதி மாலை 6 மணி முதல் 16-ஆம் தேதி வரை பிரசாரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது எனக் கூறினார்.